இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவருடைய நாட்களில் இருந்த அநேக போதகர்களை போலல்லாமல், இயேசு தனது போதனையை கடந்த கால போதகர்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட ரபிகளின் தெளிவற்ற வார்த்தைகளை மேற்கோள்களுடன் சுட்டிக்காட்டி தன்னை உயர்த்தி காண்பிக்க வேண்டிய அவசியமில்லை . தேவனுடைய வார்த்தையாகிய இயேசு (யோவான் 1:1-18) தேவனுடைய வார்த்தைகளைப் பேசினார். பிதா விரும்பியதைச் செய்தார், பேசினார் . அவரது வாழ்க்கையும் அவரது வார்த்தைகளும் முத்திரை மோதிரத்தின் அதிகாரத்தை கொண்டிருந்தன. சுவிசேஷ புத்தகங்ககளில் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) இயேசுவின் வல்லமை மற்றும் அதிகாரத்தைப் பற்றிய விழிப்புணர்வை நமக்குள் ஏற்படுத்த விரும்புகின்றன, இதனால் காலங்காலமாக, அவருடைய சத்தியத்தை தழுவி, அவரை நம் ஆண்டவராகப் பின்பற்றும்படி இவைகள் நம்மை இன்னும் அதிகமாய் அழைக்கின்றன. இந்த இயேசு, நமது போதகர் மற்றும் இரட்சகராக, இந்த உலகத்தில் வாழ்ந்த அநேக போதகர்களை விட மிகவும் சிறந்தவர், அசாதாரண தீர்க்கதரிசி அல்லது இவ்வுலகத்தின் ஞானிகளை விட மிக அதிக ஞானம் உடையவர் . அவருடைய வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. அவருடைய போதனைகள் அதிகாரபூர்வமானவை. அவரது வாழ்க்கை திகைப்பூட்டக்கூடியவை . அவருடைய அன்பு ஒப்பிட முடியாதது. எனவே, இயேசுவின் அன்பான நண்பரே, அவருடைய சித்தம் நம் விருப்பமாக எப்பொழுதுமே இருக்க வேண்டும்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே, உமது தீர்க்கதரிசிகள் மூலமாகவும் பரிசுத்த வேதாகமத்தின் மூலமாகவும் எங்களோடு பேசியதற்காக நன்றி. ஆனால், அன்பான பிதாவே , இயேசுவுக்குள் உம்முடைய மிகவும் முழுமையான மற்றும் சரியான நற்செய்தியைப் பேசியதற்காக நான் உம்மைப் போற்றுகிறேன். அவருடைய வாழ்க்கையின் குணாதிசயத்தைப் பார்க்கும்போது, ​​நான் உம்மிடம் ஈர்க்கப்பட்டேன். அவருடைய வார்த்தைகளில் உள்ள நம்பகத்தன்மையை நான் கேட்கும்போதும், அவருடைய தியாக வாழ்வில் அவை வெளிப்படுவதைப் பார்க்கும்போதும், நான் அவருக்குக் கீழ்ப்படிந்து அவருடைய சீஷராக அவரைப் பின்பற்ற முயல்கிறேன். இயேசுவை என் போதகராகவும், வழிகாட்டியாகவும், ஆண்டவராகவும், இரட்சகராகவும் அனுப்பியதற்காக உமக்கு நன்றி. மேசியா மற்றும் தேவனின் குமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து