இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேக நேரங்களில் நாம் உலகத்தை உற்று பார்ப்பதினால் காலம் நம்மை கடந்து செல்கிறது. நாம் நிறைவேற்றுவோம் என்று நமக்கு நாமே உறுதியளித்த காரியங்கள் மற்றும் பிறரிடம் நாம் சொன்ன நற்காரியங்கள் செய்யக் கூடாமல் போகின்றன . நாம் அறிவதற்கு முன்பே, நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும், மாதங்கள் வருடங்களாகவும் மாறிவிட்டன. எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்ததைச் செய்ய முடியாமல் தவிக்கிறோம். கர்த்தர் நம் பாதையில் வைக்கும் வாய்ப்புகளைப் பார்க்கவும், அதைப் பயன்படுத்தும்படி உதவ தேவனுடைய ஆவியிடம் நாம் கேட்க வேண்டும்.

Thoughts on Today's Verse...

So often we look up and time has passed us by. The things we promised ourselves we'd accomplish and the deeds we told others we'd do get left undone. Before we know it, days have become weeks, and weeks months, and months years. We find ourselves unable to do what we once assumed we could do any time we want. We must ask the Spirit of God to help us see and seize the opportunities the Lord places in our path.

என்னுடைய ஜெபம்

பிதாவே , நான் அநேக வேளை செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிடுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறேன். எனது ஒவ்வொரு நாட்களை என்னும் அறிவையும் உம்முடைய திட்டங்களைப் பார்க்கவும், உம்மை கனப்படுத்தும் வகையில் வாழவும், அதுமட்டுமல்லாமல் நீர் என்னை கொண்டு சந்திக்க விரும்புபவர்களை ஆசீர்வதிக்கவும் கேட்கிறேன் . இயேசுவின் நாமத்திலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Father, I confess that so often I leave undone what needs to be done. Please help me see your plans in each of my days and live in a way which not only honors you, but also blesses those you want me to reach. In Jesus' name I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  சங்கீதம் 90:12

கருத்து