இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

என்னுடைய தகப்பன் என்னை ஒருபோதும் வெட்கப்பட்டு தலை குனிந்து நடக்க விடமாட்டார். "நினைவில் கொள் மகனே, நீ ஒரு விலையேறப்பெற்ற பொருள் . ஆகையால் வெட்கப்பட ஒன்றுமில்லை. உன் மோசமான நாட்களிலும் கூட நீ என்னுடைய குமாரன் மற்றும் தேவனுடைய பிள்ளை !" தேவன் நம்முடைய பாதுகாவலர் மற்றும் பெருமைமிக்க பிதா . அவர் நம்மை நேசிப்பதால் நமக்கு மகிமையை தருகிறார். இப்படிப்பட்ட கிருபையான ஈவுகளை நமக்குத் தருகிற அவரே நம்முடைய பிதாவாக இருப்பதால், நாம் தலை குனிந்து, உள்ளான மனுஷனில் தளர்ந்து போகவேண்டிய அவசியமில்லை . அவர் நமக்கு சிறப்பான ஜெயத்தைக் கொடுக்கிறார் ! ஜெயத்தை அடைவது கடினமாக இருக்கும் அந்த இருண்ட நாட்களிலும், நாம் இன்னும் தேவனின் பிள்ளைகளாகவே இருக்கிறோம். நமது பிதா சூரியனுக்கு ஒரு பாதையை உண்டாக்கி நட்சத்திரங்களை அவற்றின் சுற்றுப்பாதையில் வைத்திருக்கிறார். அவர் நம் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறார். இதை நம் மனதிலே கொண்டால் எப்படி மனமுடைந்து நடக்க முடியும்?

என்னுடைய ஜெபம்

மகிமையும், மகத்துவமும், வல்லமையுமுள்ள தேவனே , இயற்கையில் நான் காணும் உமது கைவேலையின் பல்வேறு செயல்களுக்காக நான் உம்மைப் போற்றுகிறேன். உம்முடைய கட்டளையால் எங்கள் பிரபஞ்சத்தில் வைத்திருக்கும் சட்டங்களுக்காக நான் உம்மைப் துதிக்கிறேன். இயேசுவின் மீட்பின் பணிக்காக நான் உம்மைப் போற்றுகிறேன். எனவே, தேவனே , நான் என் இருதயத்தையும், என் கைகளையும், என் தலையையும் உயர்த்தி, உம்முடைய கிருபைக்காகவும், மகிமைக்காகவும் உம்மைப் போற்றுகிறேன். இயேசுவின் திருநாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து