இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

விடுவிக்கப்பட்டோம் ! மீட்க்கப்பட்டோம் ! மன்னிக்கப்பட்டோம் ! இந்த சிறிய வசனப் பகுதியின் மூலமாய் பவுலானவர் கூறியபடி , கிறிஸ்துவுக்குள் இந்த மூன்று மறுரூபமாக்கும் உண்மைகளை தேவன் நமக்குத் தருகிறார். இன்னும் முக்கியமான ஈவு "அவருடைய நேசக் குமாரன் " என்ற வார்த்தையினால் குறிப்பிடப்படுகிறது. தேவன் ஒரு திட்டத்தின் மூலமாய் , ஒரு நற்செய்தியின் வழியாய் அல்லது ஒரு மாசற்ற கிரியையின் மூலமாக மாத்திரம் நம்மை இரட்சிக்கவில்லை. மாறாக, அவர் தனக்கு மிகவும் விலையேறப் பெற்ற ஒருவரை தேர்ந்தெடுத்தார் , அவர் அவருடைய தற்சொரூபமாய் இருக்கிறார், அவருடைய ஜீவ பலியின் மூலமாக நம்மை ஒப்புரவாக்கினார். அந்த விலை மிகப்பெரியது. அதினால் உண்டான அன்பு பொங்கி வழியக்கூடியது . அதினால் உண்டான விளைவு நமக்கு கிடைத்த மிகப் பெரிய ஈவாகும் . நாம் மீட்கப்பட்டு, " உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக " செய்தார் (கொலோசெயர் 1:21-22) .

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள தேவனே,அன்பான பிதாவே , இயேசுவுக்குள்ளாய் நீர் எனக்கு அளித்த ஈவை என் வார்த்தைகளாலும், என் நற்கிரியையினாலும் திருப்பிச் செலுத்த முடியாது. இயேசுவே, உமது தியாகத்திற்கான எனது துதி , நன்றியுள்ள ஆனந்த கண்ணீரை ஏற்படுத்துகிறது . நீர் செய்த எல்லா நன்மைக்காகவும் , நீர் என்னை மறுபடியுமாய் ஜெனிப்பித்ததற்காகவும் , உம் பார்வைக்கு மிகவும் விலையேறப்பெற்றதை கொடுத்து என்னை மீட்டதற்காகவும் , நான் என் ஜீவனையே உமக்குப் துதியின் பலியாக ஒப்புவிக்கிறேன் . கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே இந்த ஸ்தோத்திரத்தை செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து