இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

விலை கொடுக்கப்பட்டாயிற்று . கிரயத்துக்கு கொள்ளப்பட்டீர்கள் . தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு தடுக்கப்பட்டது, அவரைச் சமாதானப்படுத்த நாம் செய்த காரியங்களினால் அல்ல, மாறாக நம்முடைய பாவங்களுக்காக இயேசுவை அவரே பலியாக கொடுத்ததினால் . தேவன் நம்மைத் தம்முடன் ஒப்புரவாக்கி , நம்மைத் தன் குடும்பத்தில் புத்திரசுவிகாரம் அடைய இவ்வளவு பெரிய காரியத்தை செய்திருக்கும்போது, நாம் எப்படி மறுக்க முடியும்? நாம் அப்படி செய்ய கூடாது! பிதாவாகிய தேவனே , நாங்கள் எங்களுடைய இருதயங்களை உமக்கு காணிக்கையாக கொடுக்கிறோம் !

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள தேவனே , என் பாவம் உம்முடைய இருதயத்தை நொறுக்கினது என்றும் , உமது பரிசுத்தத்தை குலைசலாக்கியது என்றும் நான் அறிவேன். எனவே, என் நன்றியை உமக்கு வாயின் வார்த்தைகளால் தெரிவிக்க முடியாது. என் பாவத்தினால் நீர் காயப்பட்டீர் , ஆனாலும் கூட அதிலிருந்து என்னை மீட்டு உம்முடன் மீண்டும் ஒப்புரவாகும்படி ஒரு பலியை கொடுத்தீர்கள். உமது கிருபைக்காக நான் உம்னைத் துதிக்கிறேன், உமது அன்புக்கு நன்றி, உனது இரக்கத்தை பகிர்ந்து கொள்வேன் என்று உறுதியளிக்கிறேன். என் பலியாகிய இயேசுவின் மூலமாய் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து