இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் தம்முடைய வார்த்தையில் உண்மையுள்ளவர் . அவர் தம்முடைய வாக்குத்தத்தங்களை எப்பொழுதும் நிறைவேற்றுகிறார். ஆனால் அந்த உண்மை அவருக்கு போதுமானதாக இல்லை. அவருடன் நம்முடைய எதிர்காலம் குறித்த முழு நிச்சயமும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் . எனவே, அவர் நமக்காக முன்னமே ஒரு விலையை கொடுத்திருக்கிறார்,அச்சாரத்தை தந்திருக்கிறார் , ஆகவே நாங்கள் எங்கள் சுதந்திரத்தில் உறுதியாக இருக்க முடியும் மற்றும் எங்கள் இரட்சிப்பு முழுமையாக நிறைவேற எதிர்நோக்குகிறோம். அவர் இயேசுவின் மூலமாய் பரிசுத்த ஆவியை நம்மீது ஒரு அபிஷேகமாக ஊற்றினார் (தீத்து 3:3-7; 1 யோவான் 2:20, 27) மேலும் வரவிருக்கும் காரியங்களுக்கு உத்தரவாதமாக நமக்குள் வாசமாயிருக்கிறார் (2 கொரிந்தியர் 1:22, 5:5) . நம்முடைய அழிந்து போகும் மாம்ச சரீரத்திலிருக்கும் நம்மை தேவன் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு , பழமையாய் அல்லது அழிந்து போகாத சரீரங்களுடன் நம்மை நித்திய வீட்டிற்கு மீட்டெடுக்கும்போது, ​​​​நமக்கு அச்சாரம் தேவையில்லை; நம்முடைய முழுமையான சுதந்திரம் நமக்கு கிடைக்கும். ஆனால் அதுவரை, நாம் அவரிடம் சேரும்வரை, அவர் நமக்குள்ளேயே தம்முடைய வீட்டை உருவாக்குகிறார் என்ற ஆச்சரியமான சத்தியத்தில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்!

என்னுடைய ஜெபம்

கடந்துச் செல்லும் மற்றும் எப்போதும் அருகில் இருக்கும் தேவனே , உம் பிரசன்னத்தை அனுபவிக்க என்னை காத்திருக்க வைக்காததற்கு நன்றி. "தேவ மகிமையின் முன்னறிவிப்பை" எனக்கு வழங்கியதற்கு நன்றி. உம் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் வாக்களிக்கப்பட்ட ஆவியை என்னில் வாழ அனுப்பியதற்கு நன்றி மற்றும் என்னுடைய வீடு உண்மையில் எங்குள்ளது என்பதை எனக்கு நினைவூட்டுங்கள். நான் உம்மை முகமுகமாய் பார்க்கும் நாள் வரை, தூய்மையான, பரிசுத்தமான மற்றும் பிறருக்கு ஆசீர்வாதமாக வாழ்வதன் மூலம், என் மரணத்துக்கேதுவான சரீரத்தில் உம் பிரசன்னத்தை கனம் பண்ண விரும்புகிறேன். இயேசுவின் பெயரில், நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து