இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சுடர்கள்( நட்சத்திரங்கள் ).அவர்கள் எப்போதும் தேவனுடைய ஜனங்களுக்கு நிலையான நம்பிக்கையின் ஆதாரமாக இருந்திருக்கிறார்கள். "உன் சந்ததி நட்சத்திரங்களைப் போல இருக்கும்" என்று தேவன் ஆபிரகாமிடம் கூறினார். "நாம் நட்சத்திரங்களை காணும்போது,மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்" என்று சங்கீதக்காரன் கேட்கிறான். கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் ஒரு நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்து இயேசுவிடம் வந்தனர் . இருளில் இருப்பவர்கள் மீது பிரகாசிக்க வானத்திலிருந்து நம்மிடம் வந்த விடிவெள்ளி ஒளியின் நட்சத்திரம் இயேசு என்பதை லூக்கா ஆசிரியர் நமக்கு நினைவூட்டுகிறார். இப்போது சுடர்களை போல பிரகாசிக்கிற நீங்கள் தான் அந்த நட்சத்திரம் . இந்த இருண்ட இவ்வுலகத்தில் பிரகாசிக்கிற ஒளியாக தேவன் நம்மை சுட்டிக்காட்டுகிறார். ஆகவே, இன்றே நம்மைச் சுற்றியுள்ள இருளாம் உலகத்திற்கு நம் ஒளி தேவனுடைய மகிமையை பிரகாசிக்கும் படி உருவாக்குவோமாக .

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உம்முடைய இந்த அதிசயமான ஆகாயவிரிவு எவ்வளவு பெரியது , அதில் கோடான கோடி நட்சத்திரங்கள், எனது ஞானத்திற்கு அப்பாற்பட்டது . ஆனால் என்னைச் சுற்றியுள்ள இருண்ட உலகில் ஒளியின் இடமாக இருக்க என்னை அழைத்ததற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன், மேலும் என்னால் முடிந்த அளவு அனைவரின் வாழ்க்கையிலும் இன்று உம்முடைய ஒளியைப் பிரகாசிப்பிக்க உறுதியளிக்கிறேன். பிரகாசமான மற்றும் விடிவெள்ளி நட்சத்திரத்தின் பெயரால் நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து