இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"ஒரு மனிதனாக, நீங்கள் உங்களை பராமரித்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்!" என் தகப்பனார் எனக்கு வேலை கொடுத்து, ஒரு இளைஞனாக எனக்கு பொறுப்பைக் கற்றுக் கொடுக்க கூறிய வார்த்தைகள் என் இருதயத்திற்குள் ஆழமாக சென்றுவிட்டது . நாம் கையிட்டு செய்யும் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும் மற்றும் நம்மை நாம் பராமரித்துக் கொள்ள வேண்டும். ஆனால், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பதன் மூலமாக நம்மைக் கவனித்துக்கொள்வது என்பது ஒரு பகுதியாகும் - தேவன் அதை காண்பது போல - நாமும் மற்றவர்களைக் கவனித்துக்கொள்வது, பின்தங்கியவர்களுக்காக உதவிசெய்வது மற்றும் வேறு யாரையாவது துஷ்பிரயோகம் செய்யும்போது அதில் தலையிட்டு விசாரிப்பது போன்ற காரியங்களை செய்ய வேண்டும் . எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் எங்கள் "சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் காவலர்கள்!" இந்த வசனத்தில் என்னை மிகவும் கண்டித்து உணர்த்துவது என்னவென்றால், நான் கீழ்ப்படிய வேண்டிய மூன்று வினைச்சொற்கள்: ஆதரியுங்கள் , நியாயம் செய்யுங்கள் மற்றும் விசாரியுங்கள் . நான் ஒன்றும் செய்யாமல் ஓரமாக உட்கார்ந்து, தேவைகளை வேறு யாராவது பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பிக்கை வைக்க முடியாது!

என்னுடைய ஜெபம்

தேவனே , சில சமயங்களில் ஒடுக்கப்பட்ட, கொடுமை இழைக்கப்பட்ட , மறக்கப்பட்ட மற்றும் உடைந்தவர்களைக் கவனித்துக் கொள்வதிலிருந்து என்னைத் தடுக்கும் சுயநலத்தின் இருதயத்தை எண்ணிலிருந்து அகற்றும் . ஒடுக்கப்பட்டவர்களையும், திக்கற்றவர்களையும், விதவைகளையும் பார்க்க உம் அக்கறையுள்ள கண்களையும், இயேசுவின் இரக்கமுள்ள இருதயத்தையும் எனக்குத் தாரும் .பரிசுத்த ஆவியானவரே, தயவுக்கூர்ந்து என்னை தட்டி எழுப்பி கிரியைகளினால் , அவர்களுக்கு ஊழியம் செய்ய எனக்கு உதவுங்கள். கர்த்தராகிய இயேசுவே, இரக்கமுள்ள கிறிஸ்துவே, உம்முடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து