இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
உங்கள் வாழ்க்கையை கொண்டு எதை உண்டாக்க வாழ்கிறீர்கள்? ஐஸ்வரியம் , புகழ், அந்தஸ்து, முக்கியத்துவம், பாரம்பரிய காரியங்கள் போன்றவைகளா ? உங்களுடைய குணநலன் எப்படிப்பட்டது ? தேவனின் குணம் நம் வாழ்வின் உண்மையான குறிக்கோளாய் இருக்கவேண்டும் அல்லவா? விடாமுயற்சியும், நற்குணமும், நம்பிக்கையும் நாம் இயேசுவுக்காக வாழும்போது, சாத்தான் மற்றும் அவனுடைய அசுத்த ஆவிகளின் வல்லமையின் அழுத்தம் மற்றும் சோதனையின் கீழ் ஒரு வலுவான நம்பிக்கையை உருவாக்க உதவும். நம்முடைய துன்பங்கள், கஷ்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றில் கூட, நாம் விரும்பிய இலக்கை நம்மிடமிருந்து எதுவும் திருட முடியாது - பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் இயேசுவுக்காக வாழும்போது தேவனின் தன்மையை வளர்த்துக் கொள்வது இயேசுவை போல நாம் நாளுக்கு நாள் மறுருபமாகிறோம் (2 கொரிந்தியர் 3:17-18) .
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே, எங்கள் வீழ்ந்து போன உலகில் உமது பரிசுத்தமான தன்மையுடன் தொடர்ந்து வாழ நாங்கள் முயல்வதால் எங்களுக்கு பெலன் தாரும் . தைரியம் மற்றும் இரக்கத்தின் இருதயங்களை எங்களுக்குத் நிலைவரப்படுத்தும் , எனவே நீர் எங்களை தைரியம், கனம் மற்றும் இரக்கத்தின் சீஷர்களாக மாற்றும்போது, உம் கிருபை மற்றும் வல்லமையை நாங்கள் இன்னும் தெளிவாக வெளிப்படுத்த முடியும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.