இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பொன்னானக் கட்டளை - அது பொன் போன்றது ஏனென்றால் சத்தியமானது , என்றென்றுமுள்ளது, விலையேறப்பெற்றது. இந்த கட்டளையை நாம் சபையில் மாத்திரம் பயன்படுத்தாமல் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிப்போமானால் இந்த உலக வாழ்க்கை நம் குடும்பத்தோடு, உடன் வேலையாட்களோடு, நம் எஜமானரோடு, நமக்கு கீழாய் வேலை செய்யும் நபர்களோடு, நம் அண்டைவீட்டாரோடு, நமக்கு உணவு வழங்கும் பணியாளர்களோடு மற்றும் சாலைகளில் இருக்கும் மக்களோடு எப்படி வேறுபட்டதாயிருக்கும் என்று யோசித்து பாருங்கள். பொற்கட்டளை நடைமுறைப்படுத்தப்பட்டால் அது எவ்வளவு அற்புதமான மாறுபட்ட உலகமாக இருக்கும். இன்று என் உலகத்தை மாற்றத் தொடங்குவேன் என்று யோசிக்கிறேன் ! நீங்கள் எப்படி?

என்னுடைய ஜெபம்

இரக்கமுள்ள பிதாவே , நீங்கள் எனக்கு பல விலையேறபெற்ற மற்றும் அற்புதமான நன்மைகளை கொடுத்திருக்கிறீர் . உமக்குத் தகுதியான நன்றியை என்னால் ஒருபோதும் போதுமான அளவு வெளிப்படுத்த முடியாது. அன்புள்ள பிதாவே , அடியேன் உமக்கு தெரிவித்து கொள்ள விரும்பும் ஒரு காரியம் என்னவென்றால், நீர் அடியேனை நீதியினாலும், நீயாயத் தீர்ப்பினாலும் நடத்தாமல் என்னைக் கிருபையினால் நடத்திய விதத்தை நான் குறிப்பாகப் போற்றுகிறேன். இந்த வாரம் என் வாழ்க்கையைத் தொடும் மக்களுடன் இதைச் செய்வதற்கான பெலனை எனக்குக் கொடுக்கும்படி தயவாய் கேட்கிறேன் . இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து