இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"விசுவாசத்தில் முன்னோடிகள் ", எபிரேயர் 11ஆம் அதிகாரத்தில் தேவனுடைய ஜனங்களை குறித்ததான விளக்கத்தை நான் மிகவும் விரும்புகிறேன். பல நூற்றாண்டுகளாக தேவனுடைய மக்களைப் பார்க்கும்போது, ​​அவர்கள் மதியீனர் , அழுகிறவர்கள் மற்றும் கோழைகளாக இருக்கவில்லை . ஆம், அவர்களுக்கு மோசமான சூழ்நிலைகள் இருந்தாலும் . ஆனால் மொத்தத்தில், அவர்கள் தங்கள் தேடலை ( அதாவது தேவ சித்தத்தை அறிவதை ) அவைகளை விட்டு வெளியேறியவர்கள் அல்ல. அவர்களுடைய விசுவாசம் நிலைத்திருக்கிறது, அவர்களே தேவனின் இரட்சிப்பின் மாபெரும் வெற்றியைக் கண்டார்கள் . இந்த வசனம் என்னை உற்சாகப்படுத்துகிறது, ஏனென்றால் பரிசுத்த ஆவியானவர் "நாம் பின்வாங்காதவர்களாக இருக்க முடியும்" என்று சொல்லவில்லை, மாறாக அவர் நம்மிலும், நமது சகிப்புத்தன்மையிலும், நம் விசுவாசத்திலும் நம்பிக்கையுடன் இருக்கிறார். நாங்கள் "பின்வாங்குகிறவர்கள் " அல்ல, நாங்கள் விசுவாசிக்கிறவர்கள் !

என்னுடைய ஜெபம்

வல்லமையுள்ள தேவனே , என் மீது நீர் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக உமக்கு நன்றி. உம் உதவியுடன், நான் "பின்வாங்குகிறவர்" ஆக மாட்டேன். என்னைச் சுற்றியுள்ளவர்கள் இல்லாவிட்டாலும், உம்முடைய உண்மை, உம் மாறாத தன்மை மற்றும் உம் சித்தத்திற்காக நான் என்றென்றும் நிற்பேன். உம்முடைய மக்களுக்கு முன்னால் உமக்கு பெரிய விஷயங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன், அதனால் நான் பின்வாங்க மறுக்கிறேன். தயவு செய்து உமது பரிசுத்த ஆவியினாவரலே எனக்கு அதிகாரம் கொடுங்கள், அதனால் நான் உமக்கு முழு நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் ஊழியம் செய்ய முடியும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து