இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மன்னிப்பு என்பது ஒரு இனிமையான ஆசீர்வாதம் . ஆனால் தேவன் நம்மை மன்னிப்பதை விட மிகவும் அதிகமாக செய்கிறார்! அவர் நம்மை கழுவி சுத்தப்படுத்தி, நம் பாவங்களை மறந்திருக்கிறார். அவருடைய அன்பு அளவிடப்பட்டதோ அல்லது அளவோடு பகிர்ந்து கொடுக்கபட்டதோ இல்லை. நாம் அவரை நம் தேவனாகவும் பிதாவாகவும் நினைத்து உண்மையாகத் தேடினால் அவர் நம்மீது அன்பைப் பொழிகிறார். ஆகவே, தேவனிடம் மன்னிப்பு கேட்போம், சர்வவல்லமையுள்ள தேவனின் வல்லமையுள்ள மற்றும் பரிசுத்த நாமத்தைப் போற்றுவோம், நம்முடைய பிதாவானவர் நமக்கு நன்மை, கிருபை மற்றும் அன்பு ஆகியவற்றை கொண்டு நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார் என்பதை நம்பிக்கையுடன் அறிவோம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , உம்முடைய அன்பும் மன்னிப்பும் என் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை நீர் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் உம்மை அழைக்கிறேன். உம்முடைய அன்பை விளங்கச்செய்ய ஆண்டவராகிய இயேசுவை அனுப்பி அதினால் என்னுடைய பாவங்களுக்கான விலையை கொடுத்து தீர்த்தமைக்காக உமக்கு நன்றி. இன்றைய நாளளவும் உம்முடைய பிள்ளையாய் அடியேன் வாழும்படி உதவியருளும். உம்முடைய மகிமைக்காக நான் வாழ முற்படுகையில், மற்றவர்கள் என் மகிழ்ச்சியையும் உம் மீதான ஆர்வத்தையும் பார்க்கும்படி உதவியருளும். என் இரட்சகரும் மீட்பருமாகிய இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து