இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"அப்பா, பிதாவே , நாங்கள் உம்மில் அன்புகூருகிறோம்" என்று நாங்கள் ஒன்றுக் கூடி பொதுவாக பாடும் போதும், ஜெபிக்கும் போதும் சொல்கிறோம். ஆனால் நமது வாக்கியத்தின் தொடக்க சொற்றொடரை மிகவும் கவனமாக நோக்குவோம். "நான் உம்மில் அன்புகூருகிறேன் , ஆண்டவரே..." பொதுவாக மற்றும் நம் பகுதியில் வாழும் மக்களோடு சேர்ந்து தொழுது கொள்ளும் போது கூட, தேவனிடம் தனிப்பட்ட அன்பை வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை நாங்கள் போதிக்கிறோம். இப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகரிடம் நீங்கள் கடைசியாக எப்போது, ​​"நான் உம்மில் அன்புகூறுகிறேன் !"என்று கூறினீர்கள்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் பிதாவே, நான் உம்மில் அன்பு கூருகிறேன். நான் உம்மில் அன்பு கூருகிறேன் ஏனென்றால் நீர் என் அன்பிற்கு பாத்திரமானவர். நீர் முதலில் என்னில் அன்பு கூர்ந்ததினால், நான் உம்மில் அன்பு கூருகிறேன். நான் உம்மில் அன்பு கூருகிறேன் , ஏனென்றால் நீர் உம்முடைய குமாரனை எனக்கு மூத்த சகோதரராக பூமிக்கு அனுப்பி, உம் பரலோக குடும்பத்தில் என்னை சேர்த்துக்கொள்ளுவதற்கு விலையாக கொடுத்தீர். நீர் என்றும் உண்மையுள்ளவராயிருப்பதற்காக நான் உம்மில் அன்பு கூருகிறேன். உம் கிருபையை கொண்டு உம்மில் அன்புகூர நீ என்னை அனுமதித்ததற்காக நான் அன்பு கூருகிறேன். இயேசுவின் நாமத்திலே நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து