இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மகிழ்ச்சியையோ, சந்தோஷத்தையோ முக்கியத்துவத்தையோஅல்லது அர்த்தத்தையோ தேடுவதற்கு நாம் புறப்படும்போது அதை அரிதாகவே கண்டுபிடிப்போம் என்பது வேடிக்கையான காரியமல்லவா மாறாக, நாம் மற்றவர்களுக்குச் ஊழியம் செய்ய முன்வரும்போது, ​​தேவனுக்கும் அவருடைய பணிக்கும் நாம் நம்மை முழு மனதுடன் அர்ப்பணிக்கும்போது, ​​நமக்கு மிகவும் தேவையானதைக் கண்டுபிடிப்போம்.

என்னுடைய ஜெபம்

ஒவ்வொரு நன்மையான மற்றும் பரிபூரணமான வரமும் வழங்குபவரே, உமது ராஜ்ஜியத்தையும் அதன் மகிமையையும் வெளிப்படுத்தும் வகையில் உமக்கும் மற்றவர்களுக்கும் ஊழியம் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு நான் இன்று கேட்டுக்கொள்கிறேன். கிரியைகளினால் நீர் அடியேனுடைய இருதயத்தின் தேவைகளை பூர்த்தி செய்ததினால் , நான் உமக்கு நன்றி கூறுகிறேன். இதை உமது குமாரனும், ஊழியக்காரராகிய இயேசுவின் மூலமாக அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து