இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வெறுப்பு - என்ன ஒரு தைரியமான மற்றும் சக்திவாய்ந்த வார்த்தை. நாம் மக்களை வெறுக்கக்கூடாது. தீமையை நாம் வெறுக்க வேண்டும்.இந்த இரண்டு காரியங்களை ஒன்றாக அடைவது கடினமான காரியம் , ஆனால் முற்றிலும் இன்றியமையாதது. பொல்லாங்கன் - வெறுப்பு, பொய்கள் மற்றும் மரணத்தின் மேல் அதிகாரி - பொல்லாங்கனினால் இங்கு தீமை உண்டாயிற்று . ஆகவே, தீமை அதன் அவலட்சணமான தலையை உயர்த்தும் போது, ​​நாம் தைரியமாக இருந்து, சாத்தானையும் அவனது செயலையும் எதிர்ப்போம். இந்த செயல்பாட்டில், அதன் பிடியில் சிக்கியவர்களுக்காக, அவர்கள் நம்மை எதிரிகளாகக் கருதினாலும், அவர்களுக்காக ஜெபம் செய்வோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , இவ் உலகில் உள்ள தீமையை கண்டு என் இருதயம் வேதனைப்படுகிறது . உமது சித்தத்துக்கும், குணாதிசயத்துக்கும் எதிரான காரியங்களிலே எனக்கு பரிசுத்தமான வெறுப்பைத் தாரும் . ஆயினும், பிதாவே , பாவத்திற்கு சிறைப்பட்டிருந்த என்னை கிருபையால் மீட்டது போல, பொல்லாங்கனுடைய பிடியில் அடிமைப்பட்டிருக்கும் மக்களை பற்றி கவலைப்பட எனக்கு தைரியத்தை தாரும் . என் இரட்சகராகிய இயேசுவின் மூலமாய் அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து