இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் அநேகதரம் தேவனின் புத்திரராய் இருப்பதன் நன்மைகளைப் பற்றி பேசுகிறோம் - மன்னிப்பு, இரட்சிப்பு, அவரோடு கூட பரலோகத்தில் ஒரு எதிர்கால வாழ்க்கை , பரிசுத்த ஆவியின் ஈவு மற்றும் கிறிஸ்துவின் வருகையின் நாளின்போது கிடைக்கும் ஜெயம். எவ்வாறாயினும், தேவனின் குணாதிசயத்தை பிரதிபலிக்கும் வகையில் நம்மை வெறுப்பவர்களிடம் மற்றும் பகைப்பவர்களிடமும் செயல்படுவதற்கான ஒரு அரிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கிறது அதுவே மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாகும். வெறுப்புக்காக எவரும் வெறுப்பை திரும்பப் பெறலாம், ஆனால் தேவனின் புத்திரராகிய நாம் நம்முடைய எதிராளிகளை அல்லது பகைஞர்களை ஆசீர்வதித்து அவர்களுக்காக ஜெபித்து, நன்மையை மாத்திரம் அவர்களுக்கு திரும்ப செலுத்தவேண்டும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே , நான் உமக்கு பகைஞராக இருந்தபோதும் என்னை நேசித்ததற்காக ஸ்தோத்திரம் . உம்முடைய அன்பை ஏற்றுக்கொள்ளவும் அல்லது நிராகரிக்கவும் எனக்கு வாய்ப்பளிக்க உம் நேசகுமாரனின் மரணத்தை பணயம் வைத்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம் . நீர் வாக்களித்தபடி, உம் அன்பை என் இருதயத்திலே ஊற்றும் , அதினால் நீர் அடியேனை நேசித்ததைப் போல நானும் என் எதிராளிகளையும் நேசிப்பேன். உம்முடைய மாபெரிதான அன்பாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அடியேன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து