இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த ஆண்டில் தேர்ந்தெடுக்கப் பட்ட வசனங்கள் ஒவ்வொன்றும் அந்தந்த தேதியின் அடிப்படையில் தேர்ந்துதேடுக்கப்படுகிறது, உதாரணமாக இன்று பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி என்றால் , நாம் தெரிந்துக்கொண்ட வசனம் ஆபகூக் 2:9 வசனத்திலிருந்து குறிப்பைக் காண்கிறோம். இது நமக்குப் பிடித்த வசனங்களை "பிடித்த பழங்களை பறிப்பது போன்று " அப்படி தேர்ந்தெடுப்பதை விட மற்ற வசனங்களையும் , பரிசுத்தம் மற்றும் கிறிஸ்து-ஐப் பற்றிய தேவனின் எல்லா வார்த்தைகளையும் கேட்க முயலுவதற்கும் நமக்கு சவால் விடுகிறது. நாம் வாழும் இவ்வுலகில் மற்றவர்களுக்கு என்ன தீங்கு நேரிட்டாலும் கூட அவர்கள் வெற்றிபெற எதையும் செய்யவும் , நாம் ஓடும் பந்தய சாலையில் நம் போட்டியாளர்களை எல்லாம் நமக்குப் பின்னால் தள்ளி அல்லது தோல்வியின் கீழே மண்ணில் தள்ளி விட்டுவிட்டு மேலே செல்லும் பந்தயத்தில், தேவனானவர் நம்மையும் சக போட்டியாளர்களையும் நோக்கி "சபாஷ் !" மற்றும் "ஐயோ!" என்கிறார். அவர் நம்மை நிறுத்தச் சொல்லி சிந்திக்க சொல்கிறார், ராஜ்ய பண்புகள் உலக பண்புகளிலிருந்து வேறுபட்டவை என்பதை உணருங்கள் - தேவபக்தியில் ஊழியஞ் செய்யாமல் வெற்றிபெற முடியாது. அவருடைய நற்பண்புகளை புறம்பே தள்ளி மற்றவர்களின் நலன் காட்டிலும் நம்முடைய நலன்களை மாத்திரம் தேடுவது அல்லது நம் நற்பண்புகளை விளையாக கொடுத்து வெற்றியை தேடுவோருக்கு "ஐயோ " என்று தேவன் எச்சரிக்கிறார்.

என்னுடைய ஜெபம்

கிருபையும் , சர்வவல்லமையுள்ள , நீதியுள்ள தேவனே , சுரண்டுவதற்கும், ஏமாற்றுவதற்கும், பொய் சொல்லி என் வாழ்க்கையை முன்னோக்கிச் செல்வதற்கான சோதனையை நான் எதிர்ப்பதற்கு அடியேனை பெலப்படுத்துங்கள். அன்புள்ள பிதாவே , நான் மெய்யாகவே , நேர்மையுள்ளவனாகவும் , பண்பும், ஆசீர்வாதமும் கொண்டவனாக இருக்க விரும்புகிறேன். என் இருதயத்திலே ஏதேனும் வஞ்சிக்கும் ஆவி இருக்கிறதா என்பதை பார்க்கவும், அதை அடையாளம் கண்டு, சீர் படுத்த உதவுங்கள். நீர் என்னிடம் எவ்வளவு அன்பாக நடந்து கொண்டீர்களோ, அப்படியே மற்றவர்களையும் நடத்த விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து