இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. இந்த காரியம் பேச்சார்களுக்கு நன்றாக தெரியும். பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கு இது தெரியும். ஆழமாக சிந்திப்போமானால் , இது உங்களுக்கும் நன்றாய் தெரியும். நாம் பேசும் வார்த்தைகளே நம்மை ஆசீர்வாதத்திற்கும் ,அழிவுக்கும் கொண்டு செல்கின்றன. அன்பான மற்றும் மென்மையான வார்த்தையிலிருந்து வரும் சொஸ்தம் விலையேறப் பெற்றது . கொடூரமான கேலி அல்லது வஞ்சகமான பேச்சு ஆவியை நொறுக்கும். அத்தகைய ஆற்றல் நம் வார்த்தைக்கு இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. நம் பேச்சில் காணப்படும் இந்த அற்புதமான ஆற்றலைப் பயன்படுத்துவது ஒரு தலையாய பொறுப்பு. இயேசுவைக் கனப்படுத்த வார்த்தைகளை அன்பாக வழங்கும்போது, ​​ வாழ்வையும், நம்பிக்கையையும், அமைதியையும் கொடுக்கும் வல்லமை உண்டு. இன்றே அப்படிப்பட்ட வல்லமையுள்ள வார்த்தைகளையே பேசுவோம்!

என்னுடைய ஜெபம்

பிதாவே , இன்று என் வார்த்தைகள் ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறேன். அவர்கள் உம் கிருபையை பிரதிபலிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்களுடைய முறிந்த ஆவிக்கு சுகத்தையும், துக்கப்படுபவர்களுக்கு ஆறுதலையும் தர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நொறுக்கப்பட்டவர்களுக்கு அன்பாக நடந்து கொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன். கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் கண்ணியமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னைச் சுற்றியுள்ள மொழி கசப்பானதாக இருக்கும்போது அவர்கள் நிமிர்ந்து இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உம் ஆவியின் மூலம், மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், உம்மைப் கனப்படுத்தவும் என் வார்த்தைகளை பயன்படுத்துங்கள். உம் விசேஷித்த வார்த்தையான இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து