இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஞாயிற்றுக்கிழமைகளில் தேவனை தொழுதுக்கொள்ள உற்சாகமாகவும், உயிர்ப்பிக்கிறதாகவும் இருக்கும். அன்றாட வாழ்வில் தேவனை ஆராதிப்பது மகிழ்ச்சியை அளிக்கும். நம் உறவுகளில் தேவனை ஆராதிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், அப்படிப்பட்ட தொழுகை எப்போதும் நம் சுயவழிகளையும், நம் சுய விருப்பங்களையும், நம்முடைய சுய யோசனையையும் விட்டுவிட்டு, மற்றவருக்காக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். நாம் மெய்யாகவே கிறிஸ்து இயேசுவை ஆண்டவராகக் கொண்டு வாழ்ந்தால், அவரைப் போலவே வாழ்வோம்; மற்றவர்களின் நன்மைக்காகவும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அவர்களுக்குச் ஊழியம் செய்வதற்காகவும் நாம் அடிபணிவோம். அப்படியாக வாழ்வது சாந்தமாக இருப்பது என்று அர்த்தமாகும் . மற்ற நேரங்களில் கடினமாக இருப்பது என்று அர்த்தம். ஆனால் அது எப்போதும் தேவனுடைய மகிமைக்காக வாழ்வதைக் குறிக்கிறது.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனாகிய ஆண்டவரே, என்னையும் என் ஆசை இச்சைகளையும் வேறு எவருக்கும் சமர்ப்பிப்பது எனக்கு கடினமாக உள்ளது. என்னுடைய கண்ணோட்டத்திலிருந்து மாத்திரமே காரியங்களை பார்ப்பது எனக்கு மிகவும் எளிதானது. மற்றவர்களின் நலனுக்காக அல்ல, எனது சொந்த நலனுக்காகவே நான் கவனம் செலுத்துகிறேன். உம்முடைய அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, இரக்கம், நற்குணம், சாந்தம், விசுவாசம் மற்றும் இச்சையடக்கம் ஆகியவற்றை என் வாழ்க்கை வெளிப்படுத்தும் வகையில், தயவுகூர்ந்து உமது ஆவியினால் என்னை இன்னும் வலிமையாக நிரப்பவும். இயேசுவின் நாமத்தினாலே , நான் உம்முடைய ஆவிக்குரிய உதவியைக் கேட்கிறேன், இதனால் என் வாழ்க்கை இயேசுவின் தன்மையை இன்னும் அதிகமாய் வெளிப்படுத்தும் . இந்த ஜெபத்தை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து