இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பெரும்பாலான மக்கள் எதை அடைவதற்காக வாழ்கிறார்கள் மற்றும் எதை சொந்தமாக்கி கொள்ள உழைக்கிறார்கள் என்பதன் பயனற்ற தன்மையை ஆபகூக் காண்கிறார். "இதோ, ஜனங்கள் அக்கினிக்கு இரையாக உழைத்து, ஜனங்கள் விருதாவாக இளைத்துப்போகிறது கர்த்தருடைய செயல் அல்லவோ? " (ஆபகூக் 2:13) இந்த வார்த்தையை நாம் இன்றைக்கு தியானிக்கும் முன் வசனத்தில் அவர் இதை குறிப்பிடுகிறார் . ஆனால் பலனற்ற உழைப்பு மற்றும் அழிந்துபோகும் காரியங்களை கையகப்படுத்துதல்களைக் காட்டிலும் நம் வாழ்க்கை முக்கியமானது என்று தேவன் நமக்கும் - அவருடைய பிள்ளைகளுக்கு - வாக்குத்தத்ததை அளிக்கிறார். நாம் அவருக்காக ஜீவிக்கலாம் மற்றும் அவரையும் அவருடைய மகிமையையும் அனுபவிக்க முடியும். தம்மை முழுமனதாய் நேசிப்பவர்களுக்கு ஒரு நாள் தேவன் தம்முடைய பிரசன்னத்தை முழுமையாக வெளிப்படுத்துவார் (1 யோவான் 3:1-3). இந்த வாக்குத்தத்தம் முழுவதுமாக நிறைவேறும் போது என்ன ஒரு மகிமையான நாள்! ஒவ்வொரு தேசத்திற்கும், ஜாதியினருக்கும் , வெவ்வேறு மொழிபேசும் , மக்களுக்கும் நம் மகிமையுள்ள தேவனை அறிவிக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வோம் (வெளிப்படுத்துதல் 7:9-12) அப்பொழுது தேவனானவர் தம்முடைய பிள்ளைகளுக்கு வாக்களித்த அந்த கிருபையின் வெள்ளத்தில் அவர்களும் பங்குகொள்ள முடியும்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உமது இரட்சிப்பை அறிய வேண்டிய ஒருவரிடம் தயவுசெய்து என்னை வழிநடத்துங்கள். உலகெங்கிலும் உள்ள உமது அடியார்கள் உம்முடைய நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களை ஆசீர்வதித்தருளும் . தயவு செய்து அவர்களுக்கு ஜெயத்தை தாரும் , இந்த மகிமையான வாக்குறுதி முழுமையாக நிறைவேறும் நாளை விரைவாய் கொண்டுவாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து