இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு நண்பருக்கு தவறு நடந்தால் கோபப்படுவதை நாம் எளிதாகக் காண்கிறோம். நாம் விரும்பும் ஒருவருக்கு அநீதி இழைக்கப்பட்டால், அநீதியை எதிர்த்துப் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம். இருப்பினும், பலவீனமானவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களையும் நாம் பாதுகாக்கவில்லை என்றால், நம்முடைய தேவனுக்கான தொழுகை மிக சிறியதாக இருக்கும் என்பதை தேவன் நமக்கு நினைப்பூட்டுகிறார். நமது உதவி நமது நண்பர்களுக்கு மாத்திரம் தேவைப்படுவதில்லை ; நம்முடைய நண்பர்களல்லாதவர்களுக்கும் கூட நம்முடைய உதவி தேவைப்படுகிறது . "நன்மை செய்வது" என்பது ஒரு நல்ல நபராக இருப்பது மற்றும் தீமையை வெறுத்து பரிசுத்தமான வாழ்க்கை வாழ்வது மட்டுமல்ல; ஒருவரும் கவனிக்க விரும்பாதவர்களைக் கவனித்து, ஆறுதல் அளிப்பது மற்றும் ஊக்கப்படுத்துவது போன்ற காரியங்களை நடப்பிப்பது என்பதே நன்மை செய்வதாகும் .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , உமது அன்பு மற்றும் கிருபையால் அடியேன் சுயநலமாக இருந்ததற்காக என்னை மன்னியுங்கள். என்னைப் போன்றவர்கள் - என்னைப் போல் இருப்பவர்கள், என்னைப் போல நினைப்பவர்கள் மற்றும் என்னைப் போல உடை அணிபவர்கள் அருகில் இருப்பது எனக்கு எளிதாக இருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னைச் சுற்றியுள்ள உலகில் பலருக்கு ஒரு நண்பர் இல்லை, ஒரு பாதுகாவலர் இல்லை என்பது எனக்குத் தெரியும். அன்புள்ள ஆண்டவரே, என் உலகத்தில் உள்ளவர்களைக் காண என் கண்களைத் திறந்தருளும் , என்னைப் பாதுகாக்கவும், ஊக்கப்படுத்தவும், ஆசீர்வதிக்கவும் வேண்டும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து