இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பெற்றோர்கள் தங்கள் புதிதாய் பிறந்த குழந்தைகள் அடம் பிடிக்கிறவர்களாகவும் , இரைச்சலிடுகிறவர்களாகவும், சில சமயங்களில் கடினமாகவும் இருந்தாலும் கூட அவர்களிடம் கவனமாகவும் மென்மையாகவும் இருக்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம்,இந்த வழியில் நடக்காத போது, ​​​​அவர்கள் கடின இருதயத்தார் மற்றும் ஆபத்தானவர்களாகக் கருதப்படுகிறார்கள். அப்படியானால், புதிய கிறிஸ்தவர்கள் தேவனின் புதிதாகப் பிறந்த குழந்தைகளாக இருப்பதால் , நமது பொறுமை அதிகமாகவும், நமது வார்த்தைகள் மிகவும் மென்மையாகவும், நமது புரிதல் மிகவும் தாராளமாகவும், நமது கவனிப்பு அதிக அக்கறையுடனும் இருக்க வேண்டுமல்லவா?

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலுள்ள பிதாவே, என்னை மன்னித்து, கிரியையில் ஈடுபட என்னைத் உற்சாகப்படுத்தும் . உம்முடைய குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை வளர்க்க நான் அதிகமாக கிரியை செய்யவில்லையே என்று வெட்கப்படுகிறேன். அவர்களின் தோல்விகளில் எனக்கு அதிக பொறுமையையும் அவர்களின் போராட்டங்களில் அதிக ஆர்வத்தையும் கொடுங்கள், அதனால் அவர்கள் தன்னிச்சையாய் காரியங்களை செய்கிறார்கள் என்று அவர்கள் உணர வேண்டியதில்லை. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து