இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அன்பு என்பது ஒரு கிரியையாகும் . வேதாகமம் இந்த சத்தியத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. அன்பு வாயின் வார்த்தைகளினால் மாத்திரம் சொல்லப்படாமல், அவைகளை நடப்பித்து காட்டவும் வேண்டும். தேவனே அன்பின் ஊற்றாயிருக்கிறார். அவர் தனது அன்பை மிகவும் அர்ப்பணிப்பான வழிகளில் வெளிக்காட்டினார், அதனால் அவருக்கான நம்முடைய நம்பமுடியாத மதிப்பை நாம் அறிந்து கொள்ள முடியும். நாம் புத்திரசுவிகாரம் அடையும்படியான விலை கொடுக்கும்படி பரலோகத்தின் மிகப்பெரிய பொக்கிஷமான தேவ குமாரனுமாகிய இயேசுவை வெறுமையாக்கி இவ்வுலகத்திற்கு இரட்சகராக அனுப்பினார்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , என்னை உம் குடும்பத்தில் ஏற்றுக்கொண்டதற்காக நன்றி. உமது தயவுக்கு நான் ஒருபோதும் போதுமான நன்றி சொல்லவோ அல்லது திருப்பிச் செலுத்தவோ முடியாது, ஆனால் உம் கிருபைக்காகவும், நீர் எனக்குக் கொடுத்த அன்பைப் பகிர்ந்து கொள்வதற்கான எனது சிறிய வழியாகவும் என் வாழ்க்கையின் ஊழியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். என் சகோதரனும், என் மீட்பின் விலையாகிய இயேசுவின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து