இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பெலன் ! இந்த கருத்தை நாங்கள் விரும்புகிறோம். அது தேவனின் பெலனாய் இருக்கும்போது, ​​​பெலன் சரியாகச் கிரியை செய்கிறது ஏனென்றால் அது தேவ பெலனுடனும், அன்பு மற்றும் சுய ஒழுக்கத்துடனும் உள்ளது. இவை மூன்றும் சேர்ந்து ஒரு மனிதனின் வாழ்க்கையை பயனுள்ள, ஆக்கபூர்வமான மற்றும் திருத்தமானதாக ஆக்குகின்றன. வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்: உண்மையாகவும் உறுதியாகவும் நிற்பதற்கு அஞ்சும் ஒரு கிறிஸ்தவராக அல்ல, ஆனால் தேவனின் பெலத்தினால் வாழ்பவராகவும், தேவனின் அன்பைப் பகிர்ந்துகொள்பவராகவும், தேவனின் நற்பண்புகளை வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பவராகவும் இருக்கவேண்டும்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே, உமது மகத்துவத்திலும் வல்லமையிலும் ஒப்பற்றவர். உம்முடைய முன் சமூகத்தில் வர தகுதியற்றவன் , ஆனால் உம்முடைய அன்பினாலும் உம் கிருபையினாலும் என்னை இங்கு அழைத்தீர்கள். நீரே என் கன்மலை, என் கோட்டை, என் பெலன் . எனது புயல் காற்றிலிருந்து என்னை நிலைநிறுத்தவும், என் தடுமாற்றங்களில் இருந்து என்னை மீட்டெடுக்கவும் உமது வழிகாட்டுதலையும், உமது இரக்கத்திற்காக காத்திருக்கிறேன். பரிசுத்த தேவனே, நீர் ஒப்பற்றவர், நான் உம்மை தொழுதுக்கொள்ளுகிறேன் . இயேசுவின் நாமத்தினால் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து