இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் ஒவ்வொரு நாளையும் தேவனுடன் தொடங்க வேண்டும். நாம் எடுக்கும் ஒவ்வொரு சுவாசமும், நம் பிதா அவருக்கு ஊழியஞ் செய்ய மற்றொரு நாளை நமக்கு அளித்திருக்கிறார் என்பது ஒரு வல்லமையான நினைவூட்டலாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இதயத்துடிப்பும் தேவனின் அன்பின் முழக்கமாக இருக்கிறது, அவருக்கு நமது சிறந்த பங்கை வழங்க மற்றொரு நிமிடம் நாம் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவூட்டுகிறது. இந்த ஆசீர்வாதம் மிக எளிதாக மறந்துவிடும். சத்தியமுள்ள வார்த்தைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிற போதும், படுத்துக் கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, நன்றாக நினைவிற் கொள்ளச் செய்ய வேண்டும் . ஆனால், இந்த உண்மைகளை அவர்கள் கற்றுக்கொள்வதை நமது உதாரணத்திற்கு மட்டும் விட்டுவிடக்கூடாது. நம்முடைய விசுவாசத்தை விளக்கவும், நம்முடைய பரலோகத் தகப்பனைத் துதிக்கவும், தேவனுடைய சத்தியத்தைப் போதிக்கவும் கற்பிக்கத்தக்க தருணங்களைக் காண்போம்.

என்னுடைய ஜெபம்

எல்லாம் வல்ல தேவனே , கிருபையின் பாதுகாவலரே, என் தகுதிக்கு அதிகமான நண்பரே, உமக்கு நன்றி! நான் எடுக்கும் இந்த மூச்சுக்காற்றுக்கும், என் உயிரைத் தாங்கும் இதயத் துடிப்புக்கும் நன்றி. நான் பயணம் செய்யும்போதும்,பேசும்போதும், ஓய்வெடுக்கும்போதும் வேலை செய்யும்போதும் நீர் அங்கு இருக்கிறீர் மற்றும் என்னை சிறந்து விளங்க தகுதி படுத்துகிறீர் என்ற விழிப்புணர்வை எனக்கு ஏற்படுத்துங்கள். என் கிருபையான பலியான இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து