இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் பிதாவாகிய தேவனை நமக்கு வெளிப்படுத்த வந்தார். தேவன் உண்மையில் எப்படிப்பட்டவர், தேவன் எப்படி நம்முடன் பழகுவார் என்பதற்கான தெளிவான விளக்கத்தை அவர் நமக்கு அளித்துள்ளார். இயேசுவினால் மாத்திரமே, மெய்யான சத்தியபரராகிய ஒரே தேவனை நாம் அறிந்துகொள்ள முடியும். நாம் கிறிஸ்துவுக்குள் இருப்பதால்,நாம் பிதாவுடன் ஒரு மேலான அன்பின் உடன்படிக்கையை பகிர்ந்துக் கொண்டிருக்கிறோம் மற்றும் அவருக்குள் ஒரு புதிய ஜீவனை பெற்றுக்கொள்ளலாம் . இது நம் மாம்ச சரீரம் மரிக்கும் போது முடிவடையாத ஒரு நீடித்த நித்திய வாழ்க்கையாகும் . இந்த நித்திய ஜீவன் , இது இப்போது தொடங்குகிறது (யோவான் 5:24), நாம் ஒவ்வொரு நாளும் அவருடன் நடக்கும்போது, ​​அது என்றென்றும் நீடிக்கிறதாய் இருக்கிறது (யோவான் 3:16-17, 10:25-26). நித்தியமான மற்றும் அதிசரமான தேவன் தம்மை நமக்குத் தெரியப்படுத்துவதே கிருபையாகும். அவர் தன்னை இயேசுவின் மூலமாக நமக்குத் தெரியப்படுத்துவதே இரட்சிப்பாகும் !

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் மற்றும் அற்புதமுள்ள பிதாவே , என் வாழ்க்கையை இயேசுவை கொண்டு உம்முடன் இணைந்திருப்பதால், உமது பிரசன்னத்தை நான் என்றென்றும் அனுபவிப்பேன் என்பதை நான் அறிவேன். நீர் அடியேனுக்காக செய்த அனைத்திற்காகவும் , என் பாவங்களிலிருந்து அடியேனை மீட்க நீர் செலுத்திய மாபெரிதான விலைக்காகவும் நான் உம்மை நேசிக்கிறேன். நான் கருத்தரித்ததை வேறு யாரும் அறியாதபோது என்னை உருவாக்கி என் வாழ்க்கைக்கான ஒரு சிறந்த திட்டத்தை வைத்திருந்ததற்காகவும் உம்மை உள்ளத்தின் ஆழத்திலிருந்து நான் நேசிக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, நீர் பிதாவாகிய தேவனாக இருப்பதற்காகவும், தன் பிள்ளைகள் தம்மை அறியவும் நேசிக்கவும் விரும்பும் ஒரு மேலான பிதாவாக இருப்பதைத் தேர்ந்தெடுத்ததற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து