இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாவத்தின் வழியை நாம் அறிந்திருக்கிறோம், ஆனாலும் சில சமயங்களில் அதன் வழியைப் பின்பற்ற விரும்புகிறோம் . நம் கண்களுக்கு அது இன்பமென்று கண்டு நாம் ஈர்க்கப்படுகிறோம். நாம் அதில் நெருக்கமாக சென்று உற்று பார்க்கும்படியாய் இடைநிறுத்துகிறோம், அதினால் அதின் விரும்பத்தக்க கண்ணியில் நம்மைப் பிடித்துக் கொள்ள அனுமதிக்கிறோம் . அதை நாமே கையாளலாம் என்று நினைத்து நம்மை நாமே வஞ்சித்துக் கொண்டு அதில் விளையாடுகிறோம். பிறகு அந்த பாவத்திலே சிக்கிக்கொண்டு அதில் பங்கு உள்ளவர்களாய் மாறுகிறோம் . இறுதியாக, நம்முடைய பாவத்தில் மற்றவர்களையும் ஈடுபடுத்துகிறோம். நாங்கள் இந்த மாதிரியை கற்றுக்கொண்டு இப்போது நிறுத்தியிருப்போம் என்று நீங்கள் நினைக்கலாம். மற்றவர்கள் இந்த அழிவின் பாதையில் செல்வதைப் பார்க்கும்போது, ​​நாம் நம் சுய ஞானத்தை கொண்டு தலையிடுவோம் என்று நீங்கள் நினைப்பீர்கள். எனவே, பாவத்தைத் தவிர்ப்போம், சோதனையை ஜெயிக்க பரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடுவோம், மற்றவர்கள் அழிவின் பாதையில் செல்லும்போது, நாம் ஆவியானவரின் ஒத்தாசையோடு தலையிட்டு அவர்களுக்கு உதவி செய்வோம் .

என்னுடைய ஜெபம்

அப்பா, என் கலகத்தனமான மற்றும் பாவமுள்ள இருதயத்திற்காக என்னை மன்னித்தருளும் . இச்சையோடு சுற்றித் திரியும்போது நான் வேண்டுமென்றே என்னையே வஞ்சிக்கிறேன் என்பதை உணர தயவுசெய்து எனக்கு உதவியருளும். நான் என்னுடைய வாழ்க்கையை உமக்காக முழுமையாகவும் பரிசுத்தமாகவும் வாழ விரும்புகிறேன். நான் பாவத்தின் கவர்ச்சியால் பிடிபடவோ அல்லது உலக ஆசைகளால் சோதிக்கப்படவோ விரும்பவில்லை, ஆனால் பாவத்தைத் தவிர்த்து, மற்றவர்கள் சோதிக்கப்படும்போது அவர்களுக்கு உதவுவதன் மூலம் உம்முடைய மகிமைக்காக ஒரு ஆவிக்குரிய வாழ்க்கையை உணர்ச்சியுடன் வாழ விரும்புகிறேன். இயேசுவின் வல்லமையான நாமத்தினாலே , நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து