இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சபிக்கப்பட்டவன்! அவர் கேலி செய்யப்பட்டார், அவரைப் பகைத்தவர்கள் அவரைச் சபித்தார்கள் என்ற அர்த்தத்தில் மாத்திரமல்ல , நம்முடைய பாவத்தின் நிமித்தமாக அவர் மரணத்தின் சாபத்தைப் பெற்றார் என்ற அர்த்தத்தை பெறுகிறது . அவர் அருவருப்பான மற்றும் கொடுமையானதை ஏற்றுக்கொண்டார் ; அவர் ஒரு சிலுவையிலே நமக்காக மரித்தார் - கேலி செய்யும் ஜனக்கூட்டத்தின் முன்பாக ஒரு சிலுவை மரத்திலே அவர் தொங்கவிடப்பட்டார், ஒரு அழுக்கான கந்தையைப் போல அவர் சிலுவை மரத்திலே தூக்கிலிடப்பட்டார். ஏன்? எதற்காக? உலகத்தை நம்ப வைக்க முயற்சி செய்யும்படி, தேவன் அவரை சாபத்திற்கு உட்படுத்தினார் . ஆனால் அவரது அவமானம் மற்றும் நிந்தையின் அழகு என்னவென்றால், பரலோகத்தின் தேவனானவர் நம் மீட்பிற்காக அந்த மாபெரிதான தனது தியாகத்தை செய்தார். இயேசுவானவர் அடைந்த கேலியும், அவமானமும், சாபமும் நம்மை பாவ சாபத்திலிருந்து விடுதலை பெற்றுத் தந்தது. " நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்" (2 கொரிந்தியர் 5:21). பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரியுங்கள் ! இயேசுவுக்கும் நன்றி செலுத்துங்கள் ! ஏனென்றால் நாம் யாவரும் மீட்கப்பட்டோம்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள அப்பா பிதாவே , உமது வழிகளை ஆழமாகப் புரிந்துக்கொண்டதை போல எங்களால் நடிக்க முடியாது, ஏன் எங்களை மீட்பதற்கு நீர் இவ்வளவு கொடூரமான தியாகம் செய்ய வேண்டும். விலையேறப்பெற்ற இரட்சகரே, முழு உலகத்தின் எல்லாருடைய பாவத்தையும் குறிப்பாக எனது பாவங்களையும் சுமந்து, அந்த பாவ மனிதர்களின் கூட்டத்தின் முன் சிலுவையில் தொங்குவது எப்படி இருந்தது என்பதை எங்களால் கற்பனை செய்து பார்க்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் இப்போதும் எங்களுக்காக உம்மோடு பரிந்துபேசும்போது, ​​எங்களுடைய வார்த்தைகள் எங்கள் இருதயத்தின் நன்றியை வெளிப்படுத்த உதவும்படி அவரிடம் கேட்பதுதான் எங்களுக்குத் தெரியும். நன்றி பிதாவே ! உம்மை ஸ்தோத்தரிக்கிறோம் ! நாங்கள் மீட்கப்பட்டோம்! அல்லேலூயா! ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து