இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசு நம்முடைய இரட்சகர் மாத்திரமல்ல, நம் சகோதரரும் கூட என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா ? பரிசுத்த ஆவியானவர் (எபிரெயர் 2:17) "அவர் தம்முடைய சகோதர சகோதரிகளைப் போலவே உருவாக்கப்பட வேண்டும்." நாம் தேவனுடைய காணாமற்போன பிள்ளைகளாக இருந்தோம், எனவே இயேசுவானவர் வந்து, நமது மரணத்தை, நமது மனித தோலை அதன் அனைத்து வரம்புகளுடனும் பகிர்ந்து கொண்டார், இதனால் அவர் நமது மாபெரிதான எதிரியான பாவ மரணத்தை உண்டாக்கும் சாத்தானை மேற்கொள்ள முடியும். இப்போது மனித மாம்சத்தில் இயேசுவானவர் வெளிப்பட்டதின் மூலமாக , மரணம் இனி நம்மை ஆட்க்கொள்ளவோ அல்லது நம்மை அழிக்கவோ முடியாது . நம்முடைய ஆவிக்குரிய மூத்த சகோதரனாகிய இயேசு அதை முறியடித்தார். எங்கள் மூத்த சகோதரர் இப்போது எங்களுடைய பிதாவின் வலதுப்பாரிசத்திலே இருக்கிறார், நாம் பிதாவின் நித்திய வீட்டிற்கு அவருடன் செல்லும் வரை, அவர் நமக்காக நித்தமும் பரிந்து பேசுகிறார் (அப்போஸ்தலர் 2:33; எபிரெயர் 4:14, 7:25; யோவான் 1:18 ).
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , இயேசுவனவர் என்னைப் போல ஒருவராக மாம்ச சரீரத்தில் இருக்கவும், என்னைப் போன்ற மக்கள் மத்தியில் நம்மில் ஒருவராக வாழவும் அனுப்பியதற்காக நன்றி. உம்முடைய தியாகத்தையும், அன்பையும் நினைத்துப் பார்க்கையில், இந்த அண்டசராசரத்தில் நீர் கொண்டுள்ள என்னுடைய முக்கியத்துவத்தை எண்ணி நான் பூரித்துவிட்டேன், ஆனாலும் எல்லாவற்றையும் உண்டாகினவருக்கு நான் பிரியமானவனானேன் ! எங்களுடைய மூத்த சகோதரனாகிய இயேசுவின் ஈவினால் அடியேனை உம்முடைய பிள்ளையாக மாற்றியதற்காக எப்பொழுதும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். சில வேளைகளில் , அப்பா பிதாவே , என்னுடைய நித்திய குடும்பமாகிய உம்மோடு மீண்டும் இணைவதற்காக காத்திருக்க எனக்கு கடினமாக உள்ளது. எனவே, எங்களின் மாபெரும் ஒப்புரவாகும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன். அன்புள்ள பிதாவே , உம்முடைய குடும்பம், அதில் உள்ள ஈவு மற்றும் உம்முடைய குமாரனை குறித்து மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த அடியேனை எடுத்து பயன்படுத்துவீராக ! இயேசுவின் நாமத்தினாலே, நான் உம்மைப் போற்றி துதித்து நன்றிசெலுத்தி ஜெபிக்கிறேன். ஆமென்.