இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது தேவனானவர் இந்த அற்புதமான வார்த்தைகளை தம்முடைய குமாரனிடம் பேசினார். நாம் நமது இரட்சகரின் முன்மாதிரியைப் பின்பற்றி ஞானஸ்நானம் எடுக்கும்போது தேவன் நம்மைப் பற்றியும் அவ்வாறே உணர்கிறார்! இயேசுவானவர் தம்முடைய ஆவியை நம்மீது ஊற்றுகிறார் (தீத்து 3:4-7), நாம் தேவனுடைய புத்திரர்கள் என்ற உத்தரவாதத்தை நமக்கு அளிக்கிறார் (ரோமர் 8:9; எபேசியர் 1:13-14). இந்த கருத்தை சாத்தான் நம்மை சந்தேகிக்க என்ன செய்தாலும் பரவாயில்லை (லூக்கா 4:3), நாம் தேவனுடைய அன்பான பிள்ளைகள், அவர் நம்மில் மிகவும் பிரியமாய் இருக்கிறார் என்பதை நாம் உறுதியாக அறியலாம்! ஆவியின் காரணமாக, நாம் பரலோகத்தின் தேவனை நம் அப்பா பிதாவே என்று அழைக்கலாம் (கலாத்தியர் 4:6), ஆவியானவர் நமக்காக பரிந்து பேசுகிறார் என்பதை அறிந்து, நம்மால் விவரிக்க முடியாத காரியங்களை கூட நம் பிதாவானவருக்கு தெரியப்படுத்துகிறார் (ரோமர் 8:26-27). நாம் தேவனுடைய பிள்ளைகள், அவர் நம்மை நேசிக்கிறார், அவர் நம்மீது அன்பாயிருக்கிறார் . ஆஹா, இப்போது இது ஒரு நல்ல செய்தி!

என்னுடைய ஜெபம்

அப்பா பிதாவே , என்னை உம்முடைய பிள்ளையாகவும், உமது கிருபையின் ஐசுவரியத்தின் வாரிசாகவும் ஆக்கியதற்காக நன்றி. உம்முடனான என்னுடைய உறவை சந்தேகிக்க வைக்கும் சாத்தானின் பொய்களைத் தாங்கும் ஆவிக்குரிய நம்பிக்கையை எனக்கு அருள்வீராக . நான் ஜெபிக்கும்போது எனக்காகப் பரிந்துபேசுவதன் மூலம் இப்போதும் உதவிசெய்து, இயேசுவைத் தேடும்போது என்னைப் பெலப்படுத்துகிற உமது பரிசுத்த ஆவியானவருக்காக நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன், ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து