இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய இரட்சிப்பு நாம் மேன்மைபாராட்ட இடமளிக்காது. தேவன் விரும்புவதற்கு ஏற்ப நியாயபிரமாண சட்டத்திட்டங்களை முழுமையாய் நம்மால் கைக்கொண்டு வாழ முடியாது . தேவனின் குணாதிசயத்துக்கு ஒப்பாக நம்மால் வாழ முடிவதில்லை. நாம் நொறுங்கிப்போய் மற்றும் பாவிகளாக இருந்தபோது, ​​தேவனானவர் தம்முடைய நேச குமாரன் இயேசுவை நமக்காக அனுப்பி, நம்முடைய பாவங்களுக்கு விலையாக அவரையே பலியாக செலுத்தி நமக்கு இரட்சிப்பை உண்டுப்பண்ணினார் (ரோமர் 5:6-11). தேவனின் அளவுக்கடந்த இரக்கமுள்ள கிருபையையும், நம் இரட்சகராகிய இயேசுவின் அசாத்தியமான தியாக அன்பையும் தவிர, நாம் மேன்மை பாராட்ட வேறு எதுவும் இல்லை.

Thoughts on Today's Verse...

God's salvation leaves us no room for boasting. We couldn't live up to the righteous demands of the law. We couldn't live up to the character of God. When we were broken and sinful, God bought our salvation by sending Jesus for us and having him pay the debt of our sins (Romans 5:6-11). We have nothing to boast about except the overwhelmingly generous grace of God and the incredible sacrificial love of our Savior, Jesus.

என்னுடைய ஜெபம்

பிதாவே, நியாயப்பிரமாணத்தின் நியாயத்தீர்ப்பிலிருந்து என்னை மீட்பதற்காக உமக்கு கோடான கோடி நன்றி, . இயேசுவே, என் பாவத்திற்கான கடனை நீர் செலுத்தியதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த ஆவியானவரே, என்னைச் சுத்திகரித்து, பரிசுத்தமாக்கி, என்னுள்ளே எப்பொழுதும் வாழ்வதற்காக உமக்கு நன்றி. தேவனே , உம் எண்ணிமுடியாத கிருபைக்காக பிதாவே உமக்கு என் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Thank you, Father, for redeeming me from the righteous judgment of the law. Thank you, Jesus, for paying my debt for sin. Thank you, Holy Spirit, for cleansing me, making me holy, and living inside me. Thank you, God, for your incredible grace. In Jesus' name, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of ரோமர்-Romans  3:27-28

கருத்து