இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் சிலுவைக்குச் செல்வதற்கு முன்பாக , ஒரு சிலுவையின் உபதேசத்தின் கீழாக வாழ்வதின் அர்த்தம் என்ன என்பதை அவர் தனது சீஷர்களுக்குக் காண்பித்தார் . அவர் வீட்டின் அடிமையை போல தன்னை தாழ்த்தி தம்முடைய சீஷர்களின் கால்களைக் கழுவினார். அவர்கள் அவரை விட்டு விலகி ஓடுவார்கள், நிராகரிப்பார்கள், காட்டிக் கொடுப்பார்கள், மறுதலிப்பார்கள் என்று தெரிந்தும் அவர் அதைச் செய்தார். அவர் அந்த மாசு படிந்த கால்களை - அவர்களின் கால்களை கழுவினார். எவ்வளவு மேன்மையான காரியம் ! ஆனால் நானும் அதை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் . " இயேசு கூறுகிறார், "நான் துன்பப்பட்டு மரித்து மீட்டவர்களை நீங்கள் நேசிக்காவிட்டால்","நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்று சொல்ல முடியாது, (1 யோவான் 3:14-18, 4:7-12).

என்னுடைய ஜெபம்

தேவனே , நான் என் போதகரைப் போலவும் உம்முடைய குமாரனைப் போலவும் இருக்க விரும்புகிறேன். நான் என் சுயத்துக்காக தேடும் வழிகளை வெறுத்து தள்ளிவிட்டு , அதனால் உம்முடைய பிள்ளைகளுக்கும் , என் சகோதர சகோதரிகளுக்கும் ஊழியம் செய்வேன் - என்னிடம் இரக்கம் காட்டாதவர்களுக்கும் நான் உண்மையாக ஊழியம் செய்ய முடியும். இந்த நம்பிக்கைகளுக்கு ஏற்ப வாழவும், என் வாழ்க்கையில் இயேசுவின் தன்மையை இன்னும் சிறப்பாக பிரதிபலிக்கவும் எனக்கு பெலனையும் , தைரியத்தையும், பொறுமையையும் தந்தருளும் . என் ஆண்டவரே, கிறிஸ்து இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து