இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய குடும்பங்கள், குழந்தைகள், பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் கிறிஸ்துவுக்குள்ளான சகோதர சகோதரிகளுடனான நமது நேரம் மிகவும் விலையேறப்பெற்றது. உங்கள் நேரத்தை எப்படி முதலீடு செய்கிறீர்கள்? நீங்கள் அதை எங்கே முதலீடு செய்கிறீர்கள்? உங்களுக்கு தெரியும், நாம் முதலீடு செய்யும் பணத்தை விட நமது நேரம் மிகவும் விலையேறப்பெற்றது. நாம் வாழும் நாட்களில் நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிட்டுவிட்டால் , அவற்றை நாம் மறுபடியுமாய் பெற்றுக்கொள்ள முடியாது. எனவே நீங்கள் ஒவ்வொரு நாளையும் தொடங்கும் போது "காலத்தின் முக்கியத்துவத்தை அறியவும் ", அது எதற்கானது என்று பார்க்கவும் , சிறந்த நன்மைக்காக அதைப் பயன்படுத்தவும் தேவனிடம் கேளுங்கள். நாட்கள் விரைவாக கடந்து செல்கிறது, மேலும் மாலை நேரத்தின் நிழல்கள் போல, இரவின் இருளில் அது கரைந்துப்போக அதிக நேரம் இல்லை.

என்னுடைய ஜெபம்

நித்தியமான தேவனே , இன்று எனக்கு கொடுக்கப்பட்டுள்ள நேரத்தைச் சிறந்த முறையில், சரியான வேளையில் , நன்மை பயக்கும் காரியங்களை செய்யப் பயன்படுத்த எனக்கு ஞானத்தைத் தந்தருளும். மெய்யாகவே எது என்றென்றும் நீடித்திருக்குமோ மற்றும் மீட்டுக்கொள்ளுமோ அதில் என் நேரத்தை முதலீடு செய்ய விரும்புகிறேன். நான் யாருடன் பழகுகிறேனோ அவர்கள் அனைவரையும் ஊக்குவிக்கவும், ஆசீர்வதிப்பதற்கும் எனது நேரத்தைப் பயன்படுத்த எனக்கு உதவியருளும் , இதனால் அவர்கள் உம்மிடம் நெருங்கி வருவார்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து