இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் தேவனை என்றென்றும் துதிப்பதும், நம் வாழ்வின் எல்லா நாட்களிலும் அவருக்கு மகிமை கொடுப்பதாக உறுதியளித்ததை கனப்படுத்தும் விதம் மிகவும் எளிமையானது: அதை இன்று முதல் அவற்றை செய்வோமாக (அவரை ஸ்தோத்திரிப்போம் ) . இன்று நாம்ஒருவிசை தேவனை துதிக்க துவங்குவோம் என்று சொன்னால், அவைகள் நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதித்து கொண்டே இருக்கும் ! ஆகவே, தேவனின் நாமத்தை உயர்த்தி, அவரை என்றென்றும் துதிக்கவும் நாம் உறுதியளிக்கும்போது, ​​அது தொடங்கும் இடத்தை நினைவில் கொள்வோம்: இன்று நாம் தேவனை துதிக்கிறோம் - நாம் பேசும் வார்த்தைகளில் மாத்திரமல்ல , நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை பொறுத்து அமைகிறது !

என்னுடைய ஜெபம்

வல்லமையுள்ள தேவனே,அன்பான பிதாவே , இன்று நீர் எவ்வளவு அற்புதமாகவும், பிரமிக்கத்தக்க விதமாயும் இருக்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன் என்பதை நான் உமக்கு சொல்ல விரும்புகிறேன், நீர் நீதியுள்ளவர், உண்மையுள்ளவர், பரிசுத்தமானவர், இரக்கமுள்ளவர். நீர் மென்மையாகவும் அன்பாகவும் இருக்கிறீர் ஆனால் மகிமையில் அற்புதமானவர் மற்றும் வலிமையில் ஒப்பிடமுடியாதவர். நீர் என் பாவத்திலிருந்து என்னை மீட்டு, என் மரணத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கையைக் கொடுத்தவர் . நீர் என்னுடைய வாழ்க்கையை நல்ல மனிதர்களால் நிரப்பியுள்ளீர் மற்றும் உம்முடன் வாழும்படியாய் ஒரு நித்திய வீட்டை எனக்கு வாக்களித்தவர் . தேவனே , உம்முடைய மகத்துவத்திலும் வல்லமையிலும், கிருபையிலும், இரக்கத்திலும் உமக்கு நிகர் யாரும் இல்லை, நீர் ஒருவரே உமக்கு நிகரானவர் . நீர் என் ராஜா, என் அற்புதமான மற்றும் அன்பான நித்திய பிதா . இயேசுவின் நாமத்தினாலே இன்றும் என்றென்றும் உம்மை துதித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து