இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆஹா! இன்று 3,000 பேர் கிறிஸ்துவுக்குள் ஞானஸ்நானம் பெற்று தேவனுடைய சொந்த ஜனமாக சேர்க்கப்படுவதைப் பார்ப்பது எவ்வளவு நன்றாக இருக்கும் அல்லவா? பெந்தெகொஸ்தே நாளில் பேதுருவின் செய்தியை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள், முதல் நூற்றாண்டு திருச்சபையின் ஆரம்பம் கிருபையின் நம்பமுடியாத கொண்டாட்டத்துடன் தொடங்கியது. (தேவாலய மலையின் தெற்கே 350க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன, அங்கு இவர்கள் ஞானஸ்நானம் பெற்றிருப்பார்கள்). அந்த நாளுக்கு முந்தின நாள் , இயேசுவின் நெருங்கிய சீஷர்களில் ஒரு சிலராக சேர்ந்து ஜெபித்தார்கள் , இவர்கள் இயேசுவானவர் பரமேறினப் பிறகு அநேக நாட்கள் செய்ததைப் போலவே செய்து வந்தார்கள் , அப்படி ஜெபிக்க ஜெருசலேமில் கூடினவர்கள் எண்ணிக்கை அன்றைய இரவிற்குள் 3,000-ஐத் தாண்டியது! (அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தில் வரலாற்றுமிக்க ஒரு சிறந்த செய்தியைப் பார்க்கிறோம்) , அதாவது இரட்சிப்பின் நற்செய்தி, மற்றும் ஆயத்தமுள்ள இருதயம் இன்னுமாய் பரிசுத்த ஆவியானவர் ஒரு எளிமையான செய்தியை கொண்டு இரட்சிப்பையும் ஒரு மார்க்கத்தையும் தேடும்படி செய்தார் என்பதை பார்க்கிறோம் . இன்று நீங்கள் ஏன் அப்போஸ்தலர் 2ஆம் அதிகாரத்தை படிக்கக்கூடாது? இயேசுவைப் பற்றி பேதுரு என்ன சொல்கிறார் என்பதை எழுதுங்கள். இரட்சிக்கப்படுவதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று பேதுரு ஆசிரியர் கூறுகிறார் என்பதை கவனித்துப் பாருங்கள் . சுவிசேஷம் இன்னும் எளிமையானது, எனவே அதைப் வாசிப்பது மட்டுமல்ல; அதை பகிர்ந்து கொள்வோம், நம் காலத்திலும் நமது உடைந்த நிலத்திலும் மறுமலர்ச்சியை கொண்டு வர தேவனிடம் ஜெபம் செய்வோம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் உன்னதமுமான தேவனே , தயவுசெய்து உமது பரிசுத்த ஆவியை எங்கள் மீது ஊற்றும் . மெய்யான மறுமலர்ச்சியை எங்களுக்கும் எங்கள் திருச்சபை மக்களுக்கும் இன்னுமாய் இவ்வுலகிலே காணாமற்போன கோடானு கோடி மக்களுக்கு உம் இரட்சிப்பையும் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். நான் இதை இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து