இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சிலுவை மற்றும் காலியான கல்லறை ஏன் மிகவும் முக்கியமானது? இந்த வாழ்வில் அத்தியாவசியமான மற்றும் மெய்யாக நீடித்திருக்கும் அனைத்தும் மற்றும் வரவிருக்கும் வாழ்க்கையில் நம் இரட்சிப்பு இயேசுவின் மரணம் அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலை சார்ந்துள்ளது! இயேசு பூமிக்கு வந்தார், நம்மைப் போல ஒருவராக வாழ்ந்து, சிலுவைக்குச் சென்றார், கிரயத்துக்கு வாங்கிய ஒரு புதிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார், மரணம், பாவம், பாதளம் ஆகியவற்ற்றின் மீது ஜெயம் பெற்று மறுபடியுமாய் உயிர்த்தெழுந்தார் - நம்முடைய பாவத்திலிருந்து நம்மை கழுவி சுத்திகரித்து, தேவனுடைய புத்திரராய் வாழ்வதற்கு நம்மை பரிசுத்த பிள்ளையாக மாற்றினார் . இயேசு நமக்கு செய்ததையே செய்தார். கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு வெளிப்படுத்தப்பட்ட தேவனின் அன்பு திகைப்பூட்டும் வகையில் கிருபையானது!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , என் பாவங்களைச் சுத்திகரிப்பதற்கு இவ்வளவு பெரிதான விலையைச் செலுத்தியதற்காக உமக்கு நன்றி. விலையேறப்பெற்ற இரட்சகரே, என்னை இரட்சிக்க எல்லாவற்றையும் தியாகம் செய்ததற்காக நன்றி. பரிசுத்த ஆவியானவரே, என்னைச் சுத்திகரித்து, கிறிஸ்துவுக்கு ஒப்பாக என்னுள் வாழ்ந்ததற்காக உமக்கு நன்றி. நாசரேத்தின் இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து