இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
என் பிள்ளைகள் சின்ன வயசுல இருந்தப்போது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. நான் மறைந்திருந்து அவங்க தூங்குறத பாத்துட்டு இருப்பேன். சில சமயங்கள்ல அவங்க உடம்பு சரியில்லாதப்போது அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்திட்டு இருப்பேன் . சில சமயங்களில அவங்க தூங்கும்போது தேவன் அவர்கள் மீது கண்ணோக்கமாய் இருப்பதற்காக உட்கார்ந்து அவரை நோக்கி ஜெபிச்சுட்டு இருப்பேன் . சில நேரங்களில், அத்தகைய ஆசீர்வாதங்களுக்கான தேவனின் அன்பின் கிருபையிலும் ஆச்சரியத்திலும் நான் மூழ்கிப்போவதாக இருக்கிறது . அவங்க இப்போ ரொம்ப வயசாயிட்டாலும், அவங்களோட வீடுகளுக்குப் போகும்போது அவங்களோட சேர்ந்து ஜெபிக்கிறதுக்காகவும் எனக்கும் அவங்களோட கூட இருந்து அவங்களோட அன்பை வெளிப்படுத்துறதுக்காகவும் நான் இன்னும் அதிகமாக ஆசைப்படுறேன். மனைவிக்கும் எனக்கும் பிதாவிடமிருந்து கிடைத்த இந்த விலைமதிப்பற்ற ஈவுகளின் அற்புதத்தை கண்டு நான் இன்னும் வியக்கிறேன்.பரலோகத்துல இருக்கிற என் அப்பா பிதா என்னை அதே மாதிரி பாசமாப் பாக்குறாரு, என் கால் வழுக்க விடமாட்டார், என்னை சந்தோஷத்துடனும் மகிழ்ச்சிசியுடனும் பாத்துட்டு உறங்கார், ஆ, அது என்னே சொல்ல முடியாத ஆச்சரியத்துல நிற்பது. நம்ம அப்பா உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்
என்னுடைய ஜெபம்
இப்போதும் நான் என் தலையை சாய்த்து படுத்து தூங்கப் போகிறேன் ,ஆண்டவரே நீர் என் ஆத்துமாவை , பாதுகாக்கும்படி வேண்டிக்கொள்கிறேன், உங்கள் அன்பான பராமரிப்பின் கீழ் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் நீர் எப்போதும் என்னோடு இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையோடே வாழ்கிறேன் . உம் கிருபைக்கும் அன்பிற்காகவும் , இன்னுமாய் உம்மோடு நித்திய வீட்டில் இருக்கும் இயேசுவுக்காகவும் நன்றி . ஒரு புதிய நாளுக்கு உம்முடன் விழித்தெழுவதற்காக, இயேசுவின் நாமத்தில், நான் தாழ்மையுடன் ஜெபிக்கிறேன், ஆமென்.


