இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நான் விசுவாசிக்கிறேன் ! தேவன் என்னை அறிந்திருப்பது மட்டுமல்ல, என்மீது அக்கறையுள்ளவர் என்றும் நான் விசுவாசிக்கிறேன். தேவன் இந்த அண்டசராசரங்களையும் உண்டாக்கினது மட்டுமல்லாமல், என் தலையில் உள்ள மயிர்களின் எண்ணிக்கையையும் அறிந்திருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் தனது நேச குமாரனை இந்த உலகை இரட்சிக்க அனுப்பியது மட்டுமல்லாமல், என்னை நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரைத் திருப்பி அனுப்புவார் என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும், அவர் மீது உள்ள என்னுடைய விசுவாசத்தினால் தேவன் மகிழ்ச்சியடைகிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்.

Thoughts on Today's Verse...

I believe! I believe that God not only knows me, but cares about me. I believe that God not only created the universe, but he knows the number of hairs on my head. I believe that God not only sent his Son to save the world, but that he's sending him back to bring me home. What's more, I believe that God is pleased by my belief.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையும் பரிசுத்தமும் நிறைந்த தேவனே, உம்முடைய உறுதியான அன்புக்கும், நிலையான உண்மையுள்ள தன்மைக்காகவும் உமக்கு நன்றி. உம் கிருபைக்கும், இரக்கத்திற்கும் நன்றி. உம் வல்லமைக்கும், அதிகாரத்துக்கும் நான் நன்றி கூறுகிறேன். உம் அற்புதமான பரிசுத்தத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். நீர் மாறாதவராயிருப்பதற்கும், என்னைப் போன்ற மனிதர்களுக்கு உம்மை வெளிப்படுத்திக் காண்பிப்பதற்காகவும் நான் நன்றி கூறுகிறேன். உம் இறுதி வார்த்தையான இயேசுவின் மூலம் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Almighty, Most Holy Lord, I thank you for your steadfast love and enduring faithfulness. I thank you for your grace and mercy. I thank you for your might and power. I thank you for your awesome holiness. I thank you... for being you, and choosing to reveal yourself to mortals like me. Through Jesus, your final Word, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of  எபிரேயர் 11:6

கருத்து