இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவை குறித்ததான நற்செய்தியைப் பரப்பவும், ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நாம் என்ன செய்யலாம்? மெய்யாகவே , நாம் செய்யக்கூடிய அநேக விஷயங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கீழே பார்ப்போம் : *நம்முடைய அனுதின ஜீவியத்தில் இயேசுவுக்காக ஒரு நன்மையான வார்த்தையை விதைப்போம் . * நம் விசுவாசத்தை மற்ற நண்பருடன் பகிர்ந்து கொள்ள முற்படுவோம் . *நற்செய்தியை மற்றவர்களிடம் பகிர்ந்துக்கொள்ளும்படியான ஒரு நோக்கத்தோடே ஊழிய பயணம் மேற்கொள்வோம் . * அநேக கலாச்சார நம்பிக்கை கொண்ட மக்கள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்கு பொருளாதார உதவிகளை அனுப்புவோம் . *மேலும் பல உள்ளன - கூடுதல் யோசனைகளுக்கு மிஷன்ஸ் ரிசோர்ஸ் நெட்வொர்க்கைப் பார்க்கவும். தயவுக்கூர்ந்து மனதில் கொள்ளுங்கள் : நீங்கள் செய்யக்கூடிய மிகவும் வல்லமை வாய்ந்த மற்றும் பயனுள்ள காரியங்களில் ஒன்று ஜெபமாகும் ! மிஷனரிகளுக்காக , சுவிசேஷகர்களுக்காக , சபையை வழிநடத்துபவர்களுக்காக மற்றும் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்பவர்களுக்காக எப்பொழுதும் ஜெபியுங்கள். இணையத்தளம் மூலமாக , வானொலி, தொலைக்காட்சி மற்றும் அச்சு அமைச்சகங்கள் மூலமாக தேவனுடைய கிருபையைப் பகிர்ந்துகொள்பவர்களுக்காகவும் ஜெபியுங்கள். எல்லா மக்களுக்கும் தேவனுடைய அன்பின் செய்தி, இயேசுவுக்குள்ளாய் நிரூபிக்கப்பட்டுள்ளதை , விரைவாக பரவவும் , அது வல்லமையாய் , அநேகரிடத்தில் தாக்கத்தை உண்டுப்பண்ண மற்றும் புதிய சீஷர்கள் உருவாக்க வளரும்படி ஜெபம் செய்யுங்கள்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள நல்மேய்ப்பரே, தொலைந்து போனவர்களுக்காக நீர் வேதனைப்படுகிறீர்கள் என்பதை நான் அறிவேன். உலகெங்கிலும் உள்ள மிஷனரிகளுக்கு நற்செய்தியின் உண்மையை தைரியமாகப் பேச நீர் அதிகாரம் தரும்படி இன்று நான் ஜெபம் செய்கிறேன். கேட்கிறவர்களின் இருதயங்களைத் தொட்டு, அவர்கள் உமது இரட்சிப்பை அனுபவிக்கும்படி நான் ஜெபிக்கிறேன் . உமது இரட்சிப்பைப் பரப்புவதில் ஒரு பகுதியாக நீ தேர்ந்தெடுக்கும் விதத்தில் என்னைப் பயன்படுத்தும்படி கேட்கிறேன் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து