இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நீங்கள் பரிசுத்தமாக இருப்பது எவ்வளவு அவசியம்? நீங்கள் நீதிமானாக இருப்பது எவ்வளவு முக்கியம் ? தேவனுடன் நெருங்கிய பரிசுத்த உறவைப் பகிர்ந்து கொள்வதன் மகிழ்ச்சியையும், தேவனை விட்டு பிரிந்ததான வாழ்க்கையில் உள்ள முழு வேதனையையும் அனுபவித்த தாவீதுக்கு , அவரது இருதயத்தை தற்காத்துகொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் எவ்வளவேணும் தீய காரியத்தை தன்னிடம் கொண்டிருக்க விரும்பவில்லை. அவர் அந்த தீய காரியங்களின் மேல் ஆசைவைக்க விரும்பவில்லை. இழிவான செயல்களைச் செய்தவர்களில் ஒருவராக அவர் இருக்க விரும்பவில்லை. துன்மார்க்கர் அளிக்கும் ஆடம்பரங்கள் மற்றும் விருந்துகளில் கூட அவர் பங்கேற்க விரும்பவில்லை. நம்முடைய இருதயத்தை தீமையிலிருந்து பாதுகாக்கும்படி தேவனிடம் மன்றாட நாம் எவ்வளவு வாஞ்சையோடு இருக்கிறோம் ? நம்மை நாமே சோதித்தறிவோம்.

என்னுடைய ஜெபம்

பிதாவே ! அற்பமான, அருவருப்பான அல்லது அக்கிரமத்தால் நான் சோதிக்கப்பட வேண்டாம். தயவு செய்து பொய்யான மற்றும் வஞ்சகம் நிறைந்த காரியங்களின் மீது பரிசுத்த இருதயத்தோடே எதிர்த்துநிற்க பெலன் தாரும் . தீமையையும் அதனுடன் தொடர்புடைய விஷயங்களையும் பார்க்க எனக்கு தெளிந்த மனக்கண்களையும், இருதயத்தில் பரிசுத்தத்தையும் தாரும் , இதனால் நான் சோதனைகாரனின் கண்ணியிலிருந்தும் உமது பரிசுத்த நாமத்தை குலைச்சலாக்கும் விஷயங்களிலிருந்தும் விலகி இருக்க முடியும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து