இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மேற்கத்திய கலாச்சாரங்களில், ஒரு காலத்தில் இருந்ததைப் போலவே அல்லது வேறு சில கலாச்சாரங்களில் உள்ள பெரியவர்கள் இருப்பது போலவே , இன்று வயதானவர்கள் மதிக்கப்படுவதில்லை. நமக்கு முன் சென்ற தேவனுடைய குணாதிசியம் கொண்டவர்களை கனம் பண்ண வேண்டியதன் அவசியத்தை வேதாகமம் நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது. இந்தப் பகுதிக்குப் பின்னால் உள்ள தகப்பன் , போதனையைப் பெறுபவரின் சரீர ரீதியான தந்தையாக இருந்தாலும் சரி, ஞானத்தைத் தேடும் இந்த மாணவரின் ஆசிரியராக இருந்தாலும் சரி, கொள்கை ஒன்றே. பல வருடங்களாக பல சோதனைகள் மற்றும் வாய்ப்புகள் மூலம் தேவனுக்கு ஊழியம் செய்து, தங்களை ஞானிகளாகவும் உண்மையுள்ளவர்களாகவும் நிரூபித்தவர்களின் குரல்களைக் கேட்பதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் பெற வேண்டியதும் அதிகம் என்பது நிச்சயம் .
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே, சர்வவல்லமையுள்ள பிதாவே, என் வாழ்க்கையில் உம்முடைய ஞானத்தையும் உம் அனுபவத்தையும் என்னுடன் பகிர்ந்து கொண்ட ஞானிகளுக்காக நன்றி. அவர்கள் என் மீது வைத்த அன்பையும் வழிகாட்டுதலையும் நான் எவ்வளவு பாராட்டுகிறேன் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள், எனக்குப் பின் வருபவர்களுக்கும் அவ்வாறே செய்ய என்னைப் பயன்படுத்துங்கள். மேலும் தங்கள் ஞானத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டவர்களுக்கு நான் குறிப்பாக நன்றி கூறுகிறேன் இவை யாவற்றையும் இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்,. ஆமென்.