இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் இயேசுவைப் பின்பற்றும்போது ஒற்றுமையானது தேவ ஆவியானவர் மூலமாய் வருகிறது. ஆனால், ஒற்றுமை என்பது நாம் ஒருவரையொருவர் பற்றிக்கொண்டு நடப்பதைவிட விட ஆழமான நோக்கத்தைக் கொண்டுள்ளது. தேவனானவர் இயேசுவைத் தம்முடைய குமாரனாக இவ்வுலகிற்கு அனுப்பினார் என்பதை உலகம் அறியும்படி நாம் ஒருமனப்பட்டு இருக்க வேண்டும் என்று இயேசுவானவர் ஜெபித்தார் (யோவான் 17). நம்முடைய துதி ஸ்தோத்திரம் தேவனுக்கு மகிமையுண்டாகும் வகையில் நாம் ஒன்றாயிருக்க விரும்புகிறோம். ஒற்றுமை என்பது இலக்கை விட அதிகமானது . நம்முடைய ஒற்றுமை என்பது தொடர்ந்து செய்யப்படும் ஒரு செயலாகும் அதினால் இவ்வுலகம் இயேசுவானவரை பற்றி அறிந்து, புரிந்து கொள்ளும். அதே சமயம், நம்மை இரட்சிக்கும்படி இயேசு கிறிஸ்துவை அனுப்பிய பிதாவை மகிமைப்படுத்துகிறோம். இன்னுமாய் மற்றவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்வதும், தேவனை மகிமைப்படுத்துவதும் தான் இயேசுவுக்காக வாழ்வது! ஒற்றுமையை நம் தலையாய கடமையாக்குவோம் !

என்னுடைய ஜெபம்

உன்னதமான மற்றும் சர்வல்லமையுள்ள தேவனே , உமது நாமத்தை வேண்டி அழைக்கும் அனைவருக்கும் நீர் நித்திய பெலன் தருகிறீர் , நான் செய்த அனைத்திற்காகவும் மன்னிப்பு கேட்கிறேன், நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையினால் காயப்படுத்திய உம்முடைய குடும்பத்திலும், இன்னுமாய் அதே வார்த்தையினால் திருச்சபையின் ஒற்றுமைக்கு பிளவு உண்டாக்கியதற்காக அடியேனை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் என்னுடைய விருப்பத்தை விட்டுவிட்டு , உமது மகிமைக்காக வாழவும் , ​​ இன்னுமாய் மற்றவர்களை ஊக்குவிக்க முற்படும்போது, ​​தயவுகூர்ந்து எனது முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி கேட்கிறேன் . இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து