இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் கிறிஸ்தவர்களாக ஆனபோது, ​ பழைய பாவ மனிதனுக்கு மரித்து, ஒரு புதிய மனிதனாக எழுப்பப்பட்டோம். ஞானஸ்நானத்தில், இயேசுவின் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதலில் நாம் பங்கடைந்தோம் (ரோமர் 6:3-14) என்பதால் பாவம், மரணம், சாத்தான் மற்றும் நரகத்திலிருந்து அவர் ஜெயித்தடைந்ததினால் நாமும் அதிலே பங்குகொள்ள முடியும் என்று விசுவாசிக்கிறோம் . நம்முடைய ஜீவன் இப்போது இயேசுவுடனும் அவருடைய எதிர்கால மகிமையுடனும் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது (கொலோசெயர் 2:12-15, 3:1-4). இவ்வுலகிலே நாம் ஆசை இச்சைகளுடன் போரிட்டு , சோதனைகளை எதிர்கொள்கிறோம், இப்போது உயிர்த்தெழுதலின் வல்லமையும், பரிசுத்த ஆவியும் நமக்குள் கிரியை செய்து அவற்றைக் மேற்க்கொள்ள உதவி செய்கிறது (யோவான் 16:33) - பழைய, மரித்த மற்றும் பாவமான மனிதன் கிறிஸ்துவுக்குள் அடக்கம்பண்ணப்பட்டு ஒரு புதிய மனிதனாக, நம் ஆண்டவரும் இராஜாவுமாகிய இயேசுவின் வருகைக்காக காத்திருக்கின்றனர் !

என்னுடைய ஜெபம்

நீதியுள்ள பிதாவே , என் கடந்த காலத்தின் மரித்த மற்றும் தூக்கி எறியப்பட்ட பாவத்தை என் இருதயத்திலிருந்தும் என் வாழ்க்கையிலிருந்தும் வெகு தொலைவில் வைத்திருக்க எனக்கு உதவிச் செய்யும் . என் வாழ்க்கை உமக்குப் பிரியமான மற்றும் பரிசுத்த ஜீவ பலியாக இருக்க வேண்டுகிறேன் . இயேசுவுக்குள் , இந்த உலகின் சோதனைகள் மற்றும் உபத்திரவத்திலும் என்னால் ஜெயிக்க முடியும் என்பதை அறிந்து,பரிசுத்த ஆவியானவரை கொண்டு உறுதியான நம்பிக்கையினால் என்னை நிரப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். இவை யாவற்றையும் என் இரட்சகராகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து