இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்தவர்கள் எல்லா காலக்கட்டத்திலும் திக்கற்றவர்களுடைய உரிமையையும் நலிந்த மக்களின் வாழ்க்கையையும் பாதுகாக்கும்படி எளியவர்களுக்காக குரல் கொடுக்கவும் அழைக்கப்பட்டவர்கள். இந்த மேன்மையான அழைப்பு, ஆசீர்வாதம், உரிமைகள், சொத்து, அதிகாரம் போன்ற காரியங்கள் நம்மிடத்தில் இருக்கலாம். ஆனால் இவைகள் நம்முடையது மட்டும் அல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும் . தேவனிடத்திலிருந்து பெற்ற இந்த நன்மைகளை கொண்டு திக்கற்ற ஏழை எளிய மக்களுடைய அதிகாரத்துக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஆசீர்வாதமாக பயன்படுத்த வேண்டும்.

Thoughts on Today's Verse...

Christians in every era are called to defend the rights of the weak, speak up for the disenfranchised, and protect the life of those who are vulnerable. This comprehensive call is the great reminder that the blessings, rights, wealth, and power we may have is not ours alone; it is a gift from God to be used to bless those who have no power to speak, to defend, or to protect themselves.

என்னுடைய ஜெபம்

பிதாவே, என் மீதும், உமது ஜனங்கள் மேலும் எழுந்தருளும், பாதிக்கப்பட்ட, கைவிடப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட மக்களுக்காக வைராக்கியத்தோடே நிற்கும்படி செய்யும். எங்களை எடுத்து உமது ஊழியத்தில் பயன்படுத்தும் குறிப்பாக பிதாவே, அடியேன் வாழ்கிறதான காலத்தில் மற்றும் பகுதியில் அதிகார மக்களின் மத்தியில் என்னை ஒரு மீட்பின் கருவியாக உபயோகித்துக் கொள்ளும்.இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.ஆமென்.

My Prayer...

Father, rouse in your people, rouse in me, a passion to stand up for those who are vulnerable to abuse, to abandonment, and to attack. Please use us, and especially Father, please use me, to be a redemptive force in the time and the circle of influence in which I live. In Jesus' name I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of நீதிமொழிகள் - 31:8

கருத்து