இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

என்றென்றும் அன்பானது அநேக இடங்களில் பேசப்படுகிறது, ஆனால் மெய்யான அன்பு தேவனிடம் மட்டுமே காணப்படுகிறது. நித்தியமுள்ள மற்றும் பரிசுத்தமுள்ள அன்பின் ஆதாரத்தை நாம் பரிசுத்த ஆவியானவர் மூலமாய் கேட்கிறோம், அப்பொழுது அவர் அதைப் பெறவும் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறார் (ரோமர் 5:5). நமக்குப் பின் வரும் சந்ததியினருக்கு அவருடைய அன்பையும் நீதியையும் பகிர்ந்து கொள்ளுமாறு தேவன் கட்டளையிடுகிறார் . வருங்கால சந்ததியினர் நம்முடைய மாபெரிதான தேவனின் மகத்துவத்தையும் கிருபையையும் கண்டு அறிந்துகொள்ளும் வகையில், ஆண்டவர் நமக்கு வாக்களித்ததை நினைவு கூர்வதன் மூலமும், தேவன் நம்மை அழைத்ததற்குக் கீழ்ப்படிவதன் மூலமும் இதைச் செய்கிறோம்.

என்னுடைய ஜெபம்

மகிமையும், கிருபையுள்ள தேவனே , உம்முடைய வாக்குத்தத்தங்களுக்கும், உமது உடன்படிக்கைகளுக்கும், உமது அன்புக்கும் மனமார நன்றி கூறுகிறேன் . உம்முடைய அன்பு என்றும் நிலைத்து நிற்கிறது என்பதை மற்றவர்கள், குறிப்பாக என் குடும்பத்தில் எனக்குப் பின் வரும் சந்ததியினர் அறியும் வகையில் நான் வாழும்படி அடியேனை ஆசீர்வதியும் . இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து