இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தாமதிப்பதினால் மனநிறைவு ஏற்படும் , மெய்யாகவே அப்படி ஒன்று இருக்கிறதா ? உண்மையாகவே நம்முடைய கலாச்சாரம் எப்பொழுதும் அப்படி நினைக்கவில்லை ! எங்கள் நன்மைகள், ஆசீர்வாதம் மற்றும் மகிழ்ச்சிகள் அனைத்தையும் இப்போது நாங்கள் பெற விரும்புகிறோம்! இன்றைய உலகில் எதற்கும் காத்திருக்க விருப்பமில்லை ! எனவே நம்முடைய "இன்றைய நவீன" சமூகத்தின் விருப்பங்களுடன் பொருந்தாத ஒரு தேவனுடைய வசனம் இருக்குமானால் , இது இப்படித்தான் இருக்க வேண்டும்: "ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்தபுத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள். இன்றைய நவீன விளம்பரத்தில் மேலே சொல்லப்பட்ட வசனத்தின் சொற்றொடர்கள் எதுவும் காணப்படவில்லை என்பதைக் கவனியுங்கள். எவ்வாறாயினும், நமக்கு முன் சென்ற மாபெரும் ஆத்துமாக்களின் எல்லா நிலையான கிரியைகளை கவனிப்போம் . நம்முடைய ஆத்தும ஆபத்திலே இருக்கும்போது நாம் அவர்களை புறக்கணிக்கிறோம். எபிரேயர் 11ல் அதிகாரத்தில் நாம் காணும் அந்த மாபெரும் விசுவாச முன்னோர்களை பின்பற்றி அந்த விசுவாசத்தை பற்றிக்கொண்டு நடப்போம் !

என்னுடைய ஜெபம்

நித்தியானந்த தேவனே , என் குணத்தை பூரணமாக உருவாக்குவதற்கு, இந்த உலகில் காணப்படாத மற்றும் எனக்கு மிகவும் தேவைப்படும் ஆத்தும ஞானத்தை வளர்த்துக் கொள்வதற்கு பொறுமையையும், விசுவாசத்தையும் பற்றிக்கொண்டிருக்க எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து