இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த வாக்குதத்தத்திற்க்கு பின்னால் உள்ள கேள்வி மிக எளிமையானது. என்னுடைய திட்டங்களுக்கான வெற்றியை எப்படி விவரிப்பது? அதற்கான விடை மிக மிக எளிமையானது: தேவனுடைய கிருபைக்காக நாம் அவருக்கு மகிமையை கொண்டுவரவேண்டும் (எபேசியர் 1:6,12,14). நமது திட்டங்களையும், வேலைகளையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறோம் என்பது நம்மை முற்றிலுமாய் தேவனுடைய விருப்பத்திற்கு கொடுப்பதாகும் (யாக்கோபு 4:13-15), தேவன் நம்மில் மகிமைப்படுகிறார் என்று விசுவாசிக்கிறோம் (கொலோசெயர் 3:17), என் நடைகளை சரியான வழிகளில் நடத்துவது என்னுடைய பெலத்தினாலாகிறதல்ல என்று உணர்ந்துகொள்வது. (நீதிமொழிகள் 16:9). தேவன் நம்மை ஆசீர்வதிக்கவும், அதிகாரம் பெற்றவர்களாகவும் வேண்டுமென்று விரும்புகிறார் ——-ஆயினும் நம்முடைய சுய ஆசை இச்சைகளை நிறைவேற்ற அப்படி செய்கிறதில்லை( யாக்கோபு 3:16), நம்முடைய நித்தியத்தின் நன்மைக்காகவும், தேவமகிமைக்காகவும் மட்டுமே செய்ய சித்தம்கொண்டிருக்கிறார் (ரோமர் 8:28). இயேசு கிறிஸ்துவை போல, நம்முடைய எண்ணங்களையும் வழிகளையும் தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதின் மூலம் , நாம் கூறுவது என்னவென்றால் "பிதாவே, என் சித்தமல்ல, உம்முடைய சித்ததின்படியே ஆகக்கடவது !"

என்னுடைய ஜெபம்

பிதாவே, உம்முடைய சித்தமே என் திட்டமாயும், . உமது மகிமையே எனது குறிக்கோளாயும் இருக்க விரும்புகிறேன். அடியேன் விரும்பும்படி செய்ய அநேக காரியங்களுண்டு ஆகிலும் என்னுடைய திட்டங்கள் உமது மகிமைக்காக இல்லாவிட்டால், எனது குடும்பங்களுக்கு இன்னும் அடியேன் வழிநடத்துகிற மக்களுக்கு ஆசீர்வாதமாய் அமையாவிட்டால், தயவுசெய்து அப்படிப்பட்டதான என்னுடைய திட்டங்களை கவிழ்த்துப்போட்டு , ஆசீர்வாதமான வேறு பாதைகளில் என்னை வழி நடத்தும். அடியேன் கையிட்டு செய்யும் எல்லாகாரியங்களிலும் நீர் மகிமைப்படும்படியாய் விரும்புகிறேன். உம்முடைய கிருபை நடத்துகிறதான இடங்களுக்கு போக விரும்புகிறேன். உமக்கும், உம்முடைய மகிமைக்காக என் வழிகளையும், திட்டங்களையும், வேலைகளையும் ஒப்புவிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து