இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய சத்தம் எப்போதும் தொனிக்கிறது . அவருடைய சாட்சிகள் அவருடைய மகிமை, மகத்துவம் மற்றும் கிருபையாய் சிருஷ்டிக்கப்பட்டவைகளின் சாட்சிகளாய் இருக்கிறது . இந்த அண்டசராசரங்களையும் அதின் அழகு மற்றும் வியக்க வைக்கும் வல்லமைக்கு பின்னால் தனக்கு காலமும் , நோக்கமும் மற்றும் எண்ணமும் ஆகியவைகளை கொடுத்தவர் அவரே என்று மகிழ்ச்சியுடனே சத்தமிடுகிறது . சிருஷ்டிகர் அற்புதமானவர், மகிமை வாய்ந்தவர், அவருடைய படைப்புகள் அனைத்தும் அவருடைய மகிமையைப் பறைசாற்றுகின்றன! சிருஷ்டிப்பின் சத்தத்துக்கு நாம் செவிசாய்க்கிறோமா?

என்னுடைய ஜெபம்

மாபெரிதான தேவனே , நீர் எண்ணி முடியாத வானங்களையும் எங்கள் சொந்த சிறிய நீல நிற பூமியையும் உருவாக்கியவர், இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் ஒரு எளியவரின் இருதய அழுகையை கவனித்ததற்காக உமக்கு நன்றி. நான் உம்மை நேசிக்கிறேன், உன்னைப் போற்றுகிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை ஆச்சரியத்துடன் வணங்குகிறேன். இந்நாளில் என் வாழ்விலும், என் வார்த்தைகளிலும், என் செயல்களிலும் உயர்ந்தவனாக இருக்கிறீர் . இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து