இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் அன்பாகவே இருக்கிறார் என்பதை நாம் அறிவோம்! கர்த்தருடைய நீதி உண்மையினாலும் கிருபையினாலும் நிறைந்திருக்கிறது என்பதை அறிவோம். ஆனால் தேவனானவர் பரிசுத்தமுள்ளவர், நீதியுள்ளவர்! அவர் நம்மை அன்பாகவும், கனிவாகவும் தண்டிக்கவில்லை என்றால், அவருடைய ஆச்சரியமான பரிபூரணத்தின் நீதியின் முன் நாம் நிற்க முடியாது. ஆயினும்கூட, நம்முடைய தேவன் நம்மைத் தண்டிக்கும்போதும், இயேசுவுக்குள்ளாய் நாம் காணும் தேவனைப் போலவே இருக்கும்படியும் நம்மை வனைந்துக்கொள்ளும் போது , ​​தகுதியில்லாத நமக்கு அவருடைய கிருபையையும், இரக்கத்தையும் கொடுக்கும்படி விரும்பினார் . தேவனுடைய கிருபையினாலும் இயேசு கிறிஸ்துவின் பலியினாலும் , நாம் தேவனுக்கு முன்பாக "உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக..." (கொலோசெயர் 1:22). ஆம்! இயேசுவினிமித்தம் நாம் தேவனுக்கு முன்பாக நிற்க முடியும்!

Thoughts on Today's Verse...

We know that God is love! We know the Lord's justice is filled with faithful, lovingkindness. But God is also holy and righteous! If he did not lovingly and tenderly correct us, we could not survive before his tremendously awe-inspiring perfection. Yet our God has chosen to give us his undeserved mercy and kindness as he corrects us and molds us to be more like him — the God we see in Jesus. Because of God's grace and Jesus' sacrifice, we stand before God "holy in his sight, without blemish and free from accusation" (Colossians 1:22). Yes! We can stand before the Lord because of Jesus!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியுள்ள பிதாவே , நான் உம்மைப் போல் நீதியுள்ள குணமும் , கிருபையுள்ள இரக்கமும் , மெய்யான அன்பான தயவும்,நியாயமுள்ளவனாகவும் இருக்க விரும்புகிறேன். ஆனால் தயவு செய்து, அன்பான பிதாவே , மட்டாய் என்னைத் தண்டியுங்கள் , ஏனென்றால் உம்முடன் ஒப்பிடும்போது நான் எவ்வளவு அற்பமானவன் மற்றும் குறைபாடுள்ளவன் என்பதை நீர் அறிவீர். என் இரட்சகரும் உம்முடைய குமாரனுமாகிய இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy and righteous Father, I want to become more like you in righteous character, gracious compassion, faithful lovingkindness, and justice. But please, dear Father, humble and correct me gently, for you know how insignificant and flawed I am compared to you. In the name of my Savior, your Son Jesus, I pray. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of எரேமியா-Jeremiah  10:24

கருத்து