இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்முடைய வீழ்ச்சிக்கு முன்னாக செல்வது பெருமையாகும் ! இந்த இரண்டு உண்மைகளையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கவும்: "நாம் பெருமை பாராட்டக்கூடாது , ஆனால் தேவன் நம்மை எவ்வளவு மேன்மையாக எண்ணுகிறார் என்பதை நான் புரிந்து கொள்ள வேண்டும்." இது எளிதானது அல்ல. சாத்தானால் நம்மை நாமே வெறுப்பதையே, நம்மைக் கொண்டு பயன்படுத்த முடியும், எப்படியெனில் நான் ஒன்றுமில்லாதவன், பிரயோஜனமற்றவன் என்று எண்ணிக்கொள்ளும்படி செய்கிறான், இதினால் நம்மை சோர்வடையச் செய்து, நம்முடைய தாலந்துகளை தேவனுடைய இராஜ்ஜியத்தின் வேளைக்கு பயன்படுத்தாமலும் , இன்னுமாய் தேவனுடைய காரியங்களில் நம் மேன்மையை உணர்ந்துக்கொள்ளாமலும் இருக்கச் செய்கிறான். மறுபுறம், பெருமை தேவனை நம் வாழ்க்கையிலிருந்து அகற்றுகிறது, மற்றும் தேவனுடைய ராஜ்யத்திற்கான எந்தவொரு பங்களிப்பையும் நமக்கு மேன்மை உண்டாக நடப்பிக்கிறோம் , தேவனுக்காக அல்ல. தேவனின் சாயலை தரித்தவர்களாய் , விழுந்துபோன மனிதகுலத்தின் ஒரு பகுதியாக இருப்பது என்பது உபதேச பிரச்சினையை விட மேலானது; இவைகள் சீஷர்களாய் இருப்பதற்கான ஒரு அனுதின போராட்டமாகும் . ஆனால், நம்மைத் தன் பிள்ளையாக்கி, நம்மை தன் குடும்பத்தில் ஏற்றுக்கொண்டவரை போற்றுவதன் மூலம் நாம் சரியான சமநிலையைப் பேணுகிறோம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்த பிதாவே , உம்முடைய பிள்ளையாக இருக்க , இயேசுவின் ஜீவனையே விலையாக கொடுத்து மீட்டுக்கொண்டீர், அதனால் நான் உமது அன்பும் மதிப்பும் பெற்றவன் என்பதை அறிவேன். உமது மகிமைக்காகவும், உம்முடைய சரீரமாகிய சபையை ஆசீர்வதிக்கவும் நீர் அடியேனுக்கு திறமைகளையும், தாலந்துகளையும் கொடுத்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் பிதாவே , எனது திறமைகள் என்னுடைய மேன்மையுடனோ அல்லது வேலையுடனோ பிணைக்கப்பட்டுள்ளன என்று எந்த ஒரு சூழ்நிலையிலும் நினைக்க விரும்பவில்லை. அடியேனை உமக்கு உகந்த பாண்டமாய் உருவாக்க அநேக ஈவுகளையும், திறன்களையும் அனுபவங்களையும் நீர் வழங்கியுள்ளீர்கள் என்பதை நான் அறிவேன், எனவே தயவுகூர்ந்து உம்முடைய மகிமைக்காக என்னை பெலப்படுத்துங்கள். ஆனால் பிதாவே, உம்முடைய ஈவினால் உண்டான மேன்மையினால் என்னை மிகைப்படுத்தவோ அல்லது நிதரிசனத்தை கொள்ளையடிக்கவோ வேண்டாம். மாறாக,உம்முடைய கிருபையினாலும், உதாரத்துவமாய் கொடுத்த ஈவினாலும் நான் என்னவாக இருக்கிறேன், என்னிடம் என்ன இருக்கிறது, நான் செய்வதை நான் செய்கிறேன் என்ற உணர்வை தாரும். உம்முடைய ராஜ்யத்தில் பணிபுரியும் உம் பணிவான ஆனால் மதிப்புமிக்க பிள்ளையாக நான் எப்போதும் இருக்கும்படி செய்யும் .என் மூத்த சகோதரனும் உமது குமரானுமான இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து